பினாங்கு மாநில தேர்தலில் இராமசாமி அகற்றப்படும் சாத்தியம் உள்ளது   

பினாங்கு டிஏபியில் உள்ள “ராமசாமி முகாம்” வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது காணாமல் போய் விடும் என்று கட்சியின் ஆருடங்கள் கணிக்கிறது.

துணை முதலமைச்சராக இருக்கும் பிராய் சட்டமன்ற உறுப்பினர் பி இராமசாமி மற்றும் அவருடன் இணைந்ததாக நம்பப்படும் பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் சிலர் கைவிடப்படலாம்.

இராமசாமி முகாமுக்கு எதிரான நகர்வுகளுக்குப் பின்னால் தேசியத் தலைவர் லிம் குவான் எங் இருப்பதாகவும், “கட்சியின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று லிம் குடும்பத்தினர் கவலைப்படுவதால்” “தனது ஆதரவாளர்களை ” கொண்டு வர விரும்புவதாகவும் கட்சியின் உள்விவகாரம் கூறியது.

கட்சியின் தலைமை பல தசாப்தங்களாக முன்னாள் பொதுச் செயலாளர் லிம் கிட் சியாங்-கால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது, அதைத் தொடர்ந்து அவரது மகன் குவான் எங் இப்போது DAP தலைவராக உள்ளார்.

ஒரு முன்னாள் எம்.பி., “ராமசாமி முகாமில்” உள்ளவர்களை குவான் எங்-கின் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் இருப்பதாகக் கூறினார். ஈகோ வேல்டு டெவலப்மென்ட் என்ற மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜு சோமு கொண்டுவரப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ராமசாமி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிசான் நேசனல் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட 2008 ஆம் ஆண்டு தேர்தலில் அறிமுகமானதில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் ஒரு தரமான சமூக சிந்தனையும், தொடர்ச்சியாக விமர்சன கண்ணோட்டத்தில் சமூகம் சார்ந்த விவாதங்களை தைரியமாக முன்வைப்பவர்.

 

fmt