அடுத்த  MACC  தலைவரை நாடாளுமன்றம் நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை – பிரதமர்

புதிய MACC தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தை நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவுக்கு (parliamentary special select committee) வழங்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.

எவ்வாறாயினும், இதை முதலில் அரசாங்க அமைப்புகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“இப்போதைய கேள்வி என்னவென்றால், ஒரு புதிய நியமனம் செய்யப்பட்டால், அல்லது ஒப்பந்தத்தின் நீட்டிப்பு (தற்போதைய எம்ஏசிசி தலைவருக்கு), பயன்படுத்தப்பட வேண்டிய முறை நாடாளுமன்றத்தில் முன்னேற்றத்தைப் பொறுத்தது”.

“Transparency International-Malaysia மற்றும் பல அமைப்புகள் பரிந்துரைத்த செயல்முறை பொறிமுறை அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC) மற்றும் அரசாங்க நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் அதிகாரம் சரியான நேரத்தில் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டால், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை”.

“செயல்முறை மதிக்கப்படும் வரை,” என்று அவர் கூறினார்.

இன்று காலைப் பிரதமரின் கேள்வி நேரத்தின் (PMQT) அமர்வின்போது மாஸ் எர்மியாட்டி சம்சுடின்(Mas Ermieyati Samsudin) (PN-Masjid Tanah) எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அன்வார் (Harapan-Tambun) பதிலளித்தார்.

புதிய MACC தலைவரை நியமிப்பதா அல்லது அதன் தற்போதைய தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் சேவையை நீட்டிப்பதா என்பது குறித்த எந்தவொரு முடிவும் முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று அவர் அறிய விரும்பினார்.

மாஸ் எர்மியாட்டியின்(Mas Ermieyati) கூற்றுப்படி, அசாம் இன்னும் சில மாதங்களில் தனது ஓய்வு வயதை எட்டுகிறார்.

ஆணைக்குழுவை பாதிக்கும் நாடாளுமன்ற சீர்திருத்தங்களுக்கு MACC தயாராக இருப்பதாக அசாம் முன்னர் கூறியிருந்தார்.

எவ்வாறெனினும், எம்ஏசிசி முழுவதையும் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வருவது ஊழல் தடுப்பு நடவடிக்கையை அரசியல் தலையீட்டிற்கு உட்படுத்தும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

பிரதமர் அன்வார் இப்ராகிம்

“புதிய நியமன முடிவை ஒரு பிரதமராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டால், பிரதமர் சில மறைமுக ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளார் என்ற வதந்திகளையும் அது தூண்டும்,” என்று மாஸ் எர்மியாட்டி கூறினார்.

இதற்குப் பதிலளித்த அன்வார், 2020 ஆம் ஆண்டில் அசாமை அந்தப் பதவிக்கு நியமித்தது அவரது கட்சித் தலைவர் முகிடின் யாசின் என்று மஸ்ஜித் தனா பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டினார்.

PN  தலைவரான முகிடின் அந்த நேரத்தில் பிரதமராக இருந்தார்.

எம்ஏசிசி சட்டம் 2009 இன் கீழ், ஒரு எம்ஏசிசி தலைமை ஆணையர் Yang di-Pertuan Agong ஆல் நியமிக்கப்படுகிறார் – பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில்.

“தற்போதுள்ள சட்டத்தின் கீழ்,  MACC ஒரு சுயாதீனமான அமைப்பாகும். அதனால்தான் நான் (பிரதமராக) பொறுப்பேற்றபோது, பாகோவால் (முகிடின்) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஏசிசி தலைவரை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தேன்”.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி

“ஏனென்றால், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பிரதமர் இருக்கும்போது, புதிய தலைவர் ஒரு புதிய எம்ஏசிசி தலைவரை நியமிப்பார் என்ற கருத்தை நான் நிறுத்த விரும்புகிறேன்.”

இதற்கிடையில், அட்டர்னி ஜெனரலை அரசு வழக்கறிஞரிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்குத் தானும் ஒப்புக்கொண்டதாக அன்வார் நாடாளுமன்றத்தில் கூறினார்.

“இந்தத் திட்டம் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது கொஞ்சம் சிக்கலானது, ஆனால் அவர்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்”.

“300 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கூடுதல் நிதி தாக்கங்களை இது உள்ளடக்கும் என்பதால் நாம் இதை முழுமையாக ஆராய வேண்டும்”.

“ஆனால், இது நிதிப் பிரச்சினை முக்கிய பிரச்சினை அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். AGC மற்றும் வழக்கு விசாரணை செயல்முறைகள் மிகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை,” என்று அவர்  Chiew Choon Man (Harapan-Miri) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.