‘அதிகாரத்தில் இருந்தபோது நான் சொத்து குவித்தேன்’ என்ற கூற்றை அன்வார் வாபஸ் பெற வேண்டும் – மகாதீர்

ஏழு நாட்களுக்குள் பிகேஆர் தலைவர் தனது அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பிரதமர் மிரட்டுகிறார்.

ஆட்சியில் இருந்தபோது தனது குடும்பத்தை வளப்படுத்தியதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

அன்வார் இப்ராகிம் ஆட்சியில் இருந்தபோது தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் வளப்படுத்தியதாகக் கூறியதை வாபஸ் பெற டாக்டர் மகாதீர் முகமட் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், நாட்டின் நீண்ட காலம் பிரதமராக இருந்த மகாதீர், இந்த மாத தொடக்கத்தில் பிகேஆர் மாநாட்டின் போது அன்வார் பேசிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ஏழு நாட்களுக்குள் அவர் அறிக்கையை திரும்பப் பெறவில்லை என்றால், அவர் மீது தேவையான நடவடிக்கை எடுப்பேன்,” என்று அவர் கூறினார்.

அன்வார் மகாதீரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அன்வார் தான் அரசாங்கத்தை வழிநடத்திய காலகட்டத்தை குறிப்பிட்டார்.

அன்வாரின் கூற்று அவரை எதிர்மறையாக சித்தரிப்பதாக மகாதீர் கூறினார்.

“நான் பில்லியன் கணக்கான ரிங்கிட்டைப் பெற்று அதை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்கும், நான் வரி செலுத்தவில்லை என்பதற்கும் அவர் ஆதாரத்தை வழங்காத வரை இது அவதூறுதான்” என்று ம்காதீர் கூறினார்.

“இப்போது அவர் பிரதமராக இருக்கிறார், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்க்ச் கூடாது.”

அன்வாருக்கு சட்ட அடிப்ப்டையில்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மகாதீரின் வழக்கறிஞர் ரபீக் ரஷீத் தெரிவித்தார்.