கட்டாய மரண தண்டனை இனி கிடையாது

கட்டாய மரண தண்டனை யை ரத்து செய்யும் சட்டத்தை மக்களவை இன்று வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவை இன்று இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்த பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம் கர்பால் சிங், மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னால் குற்றவாளிகளிடையே நன்னடத்தை சார்ந்த பின்னடைவுகள் இல்லை என்று தரவுகள் காட்டுகின்றன என்றார்.

பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம்கர்பால் சிங்

மேலும் குற்றச்செயல்களைத் தடுப்பதில் மரண தண்டனை பங்காற்றியுள்ளது என்று நிரூபிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ராம்கர்பால், மரண தண்டனை என்பது ஒரு முறை நிறைவேற்றப்ட்டால் அதோடு முடிந்தது, உயிரை திரும்ப பெற இயலாது.  ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வதற்கான உரிமைக்கு தகுதியானவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

விவாதங்களின் போது, பல சட்டமியற்றுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ததன் காரணமாக கடுமையான குற்றவாளிகளை லேசான தண்டனையுடன் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பினர்.

ராம்கர்பால் தனது உரையில், கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வது என்பது மலேசியாவில் மரண தண்டனை இல்லை என்று அர்த்தமல்ல என்றும் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, இது அவசியமாகக் கருதப்பட்டால் மரண தண்டனை உட்பட, செய்யப்பட்ட குற்றத்திற்கு விகிதாசாரமாக பொருத்தமான தண்டனைகளை வழங்குவதற்கான விருப்பத்தை நீதிபதிகளுக்கு வழங்கும்.

மாற்று தண்டனைகளில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடி ஆகியவை அடங்கும்.

இழப்பீடு வழங்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாட்சியங்களை நீதிபதிகள் கருத்தில் கொள்ள அனுமதிக்கும் நீதிமன்ற வழிமுறை உள்ளது என்றும் ராம்கர்பால் சுட்டிக்காட்டினார்.

இன்று முன்னதாக பாராளுமன்றத்தில், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் குழு, கட்டாய மரண தண்டனை விதியை ரத்து செய்வதற்கான எந்தவொரு முயற்சிக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இந்த முயற்சியை எதிர்க்கும் மற்ற குழுக்களும் வந்திருந்தன. Kedah Pembela Ummah தலைவர் நூர் ஹக்கிமி அப்த் ஹலீம், கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வது பழிவாங்கும் கொலைகளுக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டார், மேலும் அது கொலைகாரர்களுக்கு தைரியம் அளிக்கும் என்று எச்சரித்திருந்தார்.