முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமருடின் 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெர்சத்துவில் மீண்டும் சேர முயற்சித்ததாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
“இது உண்மை இல்லை… வரவிருக்கும் (மாநில) தேர்தலில் நான் PN (Perikatan Nasional) ஐ ஆதரிப்பேன் என்று குறிப்பிட்டேன்.
“நான் ஒரு பல இனக் கட்சியைச் சேர்ந்தவன். இந்தச் சிறுவன் வார்த்தையைக் கவனமாக உபயோகிப்பது நல்லது,” என்று ஜுரைடா (மேலே) ஒரு குறுஞ்செய்திமூலம் மலேசியாகினியிடம் கூறினார்.
GE15 க்குப் பிறகு கட்சியில் மீண்டும் சேருவதற்கான ஜுரைடாவின் விண்ணப்பத்தைப் பெர்சத்து நிராகரித்ததாகப் பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபைசல் வான் அஹ்மத் கமால் கூறியதை மேற்கோள் காட்டி ஃப்ரீ மலேசியா டுடே (Free Malaysia Today) செய்திக்கு அவர் பதிலளித்தார்.
மச்சாங் எம்.பி.யின் கூற்றுப்படி, சுரைடா முன்னர் கட்சியை விட்டு வெளியேறியபின்னர் பெர்சத்து ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட தனது அமைச்சர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.
ஜுரைடாவின் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான முடிவு ஒருமனதாக இருந்தது என்று வான் ஃபைசல் மேலும் கூறினார்.
இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த வான் ஃபைசாலை அணுகுவதாக ஜுரைடா கூறினார்.
பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மட் ஃபய்சல்
2020 இல் ஷெரட்டன் நகர்வை அடுத்து PKR இல் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜுரைடா பெர்சத்துவில் சேர்ந்தார்.
பெர்சத்துவிலிருந்து வெளியேறியபின்னர், அவர் புதிதாக உருவாக்கப்பட்ட Parti Bangsa Malaysia (PBM) இல் சேர்ந்தார், ஆனால் அதன் தலைவர் லாரி சுங்குடனான அதிகார மோதலைத் தொடர்ந்து அவர் பின்னர் PBM இல் இருந்து நீக்கப்பட்டார்.
ஜுரைடா தற்போது முன்னாள் அம்னோ தலைவர் அன்வார் மூசாவால் நிறுவப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான முஃபாகாட் நேசனல்(Muafakat Nasional) துணைத் தலைவராக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் GE15 இல் மூன்று முறை வகித்த தனது அம்பாங் தொகுதியைத் தக்கவைக்கத் தவறிவிட்டார், மேலும் அவரது வைப்புத்தொகையையும் இழந்தார்.
கடந்த மாதம், ஆறு மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேசனலை (PN) ஆதரிப்பதாக அவர் கூறினார்.