இந்த ஆண்டு 15,000 முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு – சிவகுமார்

மனிதவள அமைச்சகம், மலேசிய சிறைத்துறையுடன் இணைந்து, மொத்தம் 15,000 முன்னாள் கைதிகள் மற்றும் ஹென்றி கர்னி(Henry Gurney school) பள்ளியில் இருந்து வெளியானவர்களுக்கு  விரைவில்  வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

தற்போது 77,000 கைதிகள்  விடுதலை செய்யப்பட்டவுடன் பணியமர்த்தப்படக்கூடியவர்களாக இருப்பதாகவும், இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாடு சார்ந்திருப்பது குறையும் என்று  மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியே இருக்கிறோம்.நாட்டில் கிடைக்கும் இந்த மனிதவளத்தைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நமக்கு இழப்புதான்”.

“இது சம்பந்தமாக, அதிகமான முதலாளிகள் தண்டனையை அனுபவித்த இந்தக் குழுவினர்  புதிய வாழ்க்கையைத் தொடங்க மறுபடியும்  வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சிவக்குமார் (மேலே) இன்று விஸ்மா பெர்கெசோவில் சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக் குறிப்பு (NoC) கையொப்பமிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் சிறைத்துறை ஆணையர்-ஜெனரல் நோர்டின் முஹமட் மற்றும் சோக்சோ தலைமை நிர்வாகி முகமது அஸ்மான் அஜிஸ் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

2021 முதல் கடந்த மாதம்வரை, ஹென்றி கர்னி பள்ளியில் மொத்தம் 588 கைதிகள், பல வகையான அரசு முனெடுப்புகளின் வழி வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்று சிவக்குமார் கூறினார். இதில்  கைதிகளுக்கு  இலவச உரிமம் வழங்கும் திட்டம் மற்றும் மறு நுழைவு @MyFutureJobs திட்டம் போன்ற முயற்சிகளும் அடங்கும்.

“இந்த எண்ணிக்கையில் 409 முன்னாள் கைதிகள், 44 பரோல் கைதிகள் மற்றும் கண்காணிப்பில் உள்ள நபர்கள் இருந்தனர், மீதமுள்ளவர்கள் ஹென்றி கர்னி பள்ளியின் கைதிகள்”

இதற்கிடையில், மார்ச் 27 ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராகிமின் கம்போடியா பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக நாட்டில் கம்போடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சிவக்குமார் கூறினார்.

கம்போடியா மலேசியாவில் பணிபுரிய அனுப்பும் முன் அதன் பணியாளர்களுக்குப் பயிற்சி மற்றும் வெளிப்பாடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அவரது கூற்றுப்படி, நாட்டில் 926 வீட்டுப் பணியாளர்கள் உட்பட 4,422 கம்போடிய தொழிலாளர்கள் உள்ளனர்