என்னை உருக்கிய சைக்கிள் அசம்பாவிதம் கல்லறை  வரை தொடரும் – சாம்

ஜோகூர் சைக்கிள் சோகம் நிறைந்த அந்த அசம்பாவிதம் தன்னை எப்போதும் உருக்குவதாகவும் , அது தனது கல்லறை வரையில் பின்தொடரும் என்று சாம் கே டிங் கூறினார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை தனது தண்டனையை ரத்து செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய 28 வயதான அவர், 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது கார் அவர்கள் மீது மோதியதில் இறந்த சைக்கிள் ஓட்டுய எட்டு இளம் பிள்ளைகளின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.

அன்று இரவு நடந்தது ஒரு விபத்து என்றும், இப்போது தான்  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பது போதுமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

கறுப்பு நிற மேலடையும் சந்தன கலரில் கால்சட்டையும் அணிந்திருந்த சாம், பாதிப்படைந்த  குடும்பத்தினரை  அனுதாபத்துடன் ஆறுதல்படுத்த முயன்றார்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் முகமட் அஸ்ரி டேனிஷ் சுல்கெப்லி, 14; முகமது ஷாருல் இஸ்வான் அசுரைமி, 14; முஹம்மது பிர்தாஸ் டேனிஷ் முகமது அசார், 16;  பௌசன் ஹல்மிஜான், 13; முகமது அசார் அமீர், 16; முகமது ஹரித் இஸ்கந்தர் அப்துல்லா, 14; முகமது ஷாருல் நிஜாம் மருதீன், 14; மற்றும் ஹைசாத் கஸ்ரின், 16.

பிப்ரவரி 8, 2017 அன்று நடந்த அந்த சம்பவம் இப்போது வரை தன்னை கவலையால் பின் தொடர்வதாக அவர் கூறினார்.

“எனது மனதில் ஒவ்வொரு விநாடியும் இந்த சோகத்தின் வலியை நான் எப்போதும் சுமப்பேன். அந்த இரவின் சோகம் என்னை ஆட்டிப்படைக்கிறது.”

“இந்த உணர்வு கல்லறைக்கும் உடன் வரும் என்று நான் நம்புகிறேன்,” என்று சாம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தனது அறிக்கையை சாம் படித்த போது அவருடன், தலைமை வழக்கறிஞர் ஹிஸ்யாம் தெ போ டீக் மற்றும் அவரது சட்டக் குழுவின் பிற உறுப்பினர்களும்  உடன் இருந்தனர்.