தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு 2 ஆதரவு வசதி (Account 2 Support Facility) ஏப்ரல் 7 ஆம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை மொத்தம் 59,230 பங்களிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இருப்பினும், துணை நிதி அமைச்சர் அஹ்மத் மஸ்லான்(Ahmad Maslan) (மேலே) 27,705 பேர் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்று கூறினார்.
“தகுதியற்றவர்கள் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால், 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்,” என்று அவர் இன்று கணக்காளர் ஜெனரல் திணைக்களத்திற்கு வருகை தந்தபின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
FSA2 என்பது EPF உறுப்பினர்கள் வங்கி நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட நிதியைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வசதியாகும்.
இதுவரை, இரண்டு வங்கிகள் FSA2 இல் பங்கேற்கின்றன – அவை MBSB மற்றும் Bank Simpann Nasional.
FSA2 அதிகபட்சமாக ரிம50,000 (subject to EPF Account 2 balance) மற்றும் 10 ஆண்டுகள்வரை திருப்பிச் செலுத்தும் காலத்தை உள்ளடக்கியது.
வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று, விண்ணப்பதாரர் தங்கள் EPF கணக்கு 2 இல் குறைந்தபட்சம் ரிம3,000 வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, வீடுகளை வாங்குவதற்கும், கல்வி, சுகாதாரம், நாள்பட்ட நோய் போன்ற சில பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும், ஹஜ் செலவுகளை ஈடுகட்ட அதிகபட்சம் ரிம3,000 க்கும் EPF கணக்கு 2 இலிருந்து திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.
“நாங்கள் அதை அனுமதிக்காவிட்டால், ஈபிஎஃப்-ல் இருந்து திரும்பப் பெற முடியாது என்று நாங்கள் கூறவில்லை. ஈபிஎஃப் நிதியை இன்னும் திரும்பப் பெறலாம்”.
“ஒரு உறுப்பினர் ஈபிஎஃப் கணக்கு 2 இலிருந்து பணம் எடுக்க ஐந்து பகுதிகள் உள்ளன, அதே நேரத்தில் கணக்கு 1 ஐ திரும்பப் பெற அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் இது குறிப்பாக ஓய்வூதிய நோக்கங்களுக்காக,” என்று அவர் கூறினார்.