ஊழல் சந்தேகத்தில் அமைச்சர் சிவகுமாரின் உதவியாளர் கைது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில், மனிதவள அமைச்சரின் உதவியாளரைக் கைது செய்தது, ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதில் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு சிவகுமாரின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது சான்றாகும்.

எம்ஏசிசி அதன் விசாரணையை மேற்கொள்ள நாங்கள் அனுமதிப்போம், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால், உரிய நீதிமன்ற நடைமுறைக்கு நாங்கள் கட்டுப்படுவோம், என்று அவர் இன்று ஒரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் அடையாளம்கண்ட நபர்கள் தங்கள் சொந்த செயல்களின் விளைவுகளைச் சுமக்க வேண்டும்.

நேற்று, சிவக்குமாரின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும் வெளிநாட்டு பணியாளர் ஆட்சேர்ப்பு முகவருடனும் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பல அமைச்சக அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

 

-fmt