அமைச்சரவை உறுப்பினர்களின் 20% ஊதியக் குறைப்பு மற்றும் அன்வார் இப்ராஹிம் பிரதம மந்திரியாக இருந்து தனது சம்பளத்தை எடுக்காததால், அரசாங்கம் ஒரு மாதத்திற்கு ரிம 100,000 சேமிக்கிறது.
பிரதம மந்திரி துறை அமைச்சர் (Sabah, Sarawak Affairs and Special Duties) அர்மிசான் முகமட் அலி(Armizan Mohd Ali), இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் வரை சேமிப்பு கிடைக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் மீளும் வரையில் மாதாந்தம் 20 வீதம் சம்பளக் குறைப்பை மேற்கொள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“புதிய அரசாங்கம் உருவானவுடன், பிரதமரே அறிவித்தபடி பிரதமராகச் சம்பளம் வாங்காமல் சேமிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஒற்றுமை அரசாங்கம் எடுத்தது”.
“அத்துடன், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் வரை மக்கள்மீதான அக்கறையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து 20% பிடித்தம் செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று ஆர்மிசான் (மேலே) ஒரு எழுத்துப்பூர்வ நாடாளுமன்றப் பதிலில் கூறினார்.
அமைச்சர்களின் ஊதியக் குறைப்பால் அரசாங்கம் எவ்வளவு சேமிக்கிறது, மேலும் இந்தச் சேமிப்பு மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று மூவார் எம்பி சையட் சாடிக் சையட் அப்துல் ரஹ்மானுக்கு அவர் பதிலளித்தார்.
நவம்பர் 24, 2022 அன்று அன்வார் பிரதமராகப் பதவியேற்றபிறகு, அவர் சம்பளம் வாங்கப் போவதில்லை என்று கூறினார்.
இதில் அவர் நிதியமைச்சராக இருந்த சம்பளமும் அடங்கும்.
நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வரை 20% ஊதியக் குறைப்பை மேற்கொள்வதாக அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.