சூடானில் இருக்கும் மலேசியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களை மீட்போம் – அன்வார்

சூடானில் நிலவும் மோதலை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அந்நாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவோம்  என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“இன்று காலை எனக்கு அறிக்கை கிடைத்தது. அங்கு நிலைமை இன்னும் கட்டுபாட்டுக்குள் உள்ளது என்று நினைக்கிறேன்.”

ஆனால் ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் அவர்களை நேராக நாட்டிற்கு அழைத்து வருவோம், என்று அவர் இன்று ஒரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சூடான் இராணுவம் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளை உள்ளடக்கிய சூடானில் மோதல் அரசியல் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது மற்றும் நாட்டில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மாமன்னர் யாங் டி-பெர்துவான்  சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நாட்டில் மோதல்கள் மோசமடைந்தால், சூடானில் உள்ள மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியைத் தொடர்ந்து சூடானில் உள்ள சக நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

-fmt