பிரதமராக பதவியில் இருந்தபோது மகாதீர் தனது குடும்பத்தை மேம்பாட்டுத்திக் கொண்டதாக கூறியது தொடர்பான கருத்துக்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள அன்வார் இப்ராகிம் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார்.
கடந்த மாதம் பிகேஆர் காங்கிரசில் அன்வார் கூறிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் அல்லது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று மகாதீர் கோரினார்.
மகாதீரின் கோரிக்கைக்கு பதில் அளித்த அன்வாரின் வழக்கறிஞர் அல்லிஃப் பெஞ்சமின் சுஹைமி, மகாதீர் வழக்கு தொடர்ந்தால், எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றத்தில் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
பிகேஆர் மாநாட்டில், மகாதீர் தனது பதவியில் இருந்த காலத்தில் தனது குடும்பத்தை வளப்படுத்தினார் என்று அன்வார் கூறியது சர்ச்சையானது. மகாதீர் 1981-2003 மற்றும் 2018-2020 வரை பிரதமராக இருந்தார்.
மார்ச் 28 அன்று அன்வாருக்கு மகாதீர் நோட்டீஸ் அனுப்பினார். அவரை சொன்னதை வாபஸ் பெறவும், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரப்பட்டது. இன்று முன்னதாக, பதிலளிக்க வேண்டிய கடைசி நாள் இன்றே என்பதை மகாதீர் அன்வாருக்கு நினைவூட்டினார்.
பிகேஆர் தலைவரான அன்வார், மாநாட்டில் தான் கூறியவற்றுக்கு ஆதாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.
-fmt