அம்னோ- ஹராப்பான் உறவு நீடிக்கும் – இளைஞர் தலைவர் அக்மல்

அம்னோவிற்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையேயான “கட்டாய திருமணம்” இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர புரிதலும் மரியாதையும் இருக்கும் வரை நீடிக்கும் என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே கூறுகிறார்.

முன்னாள் போட்டியாளர்களான அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் அவர்களின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு உடன்படிக்கையை உருவாக்குவது கடினம் என்று ஒப்புக்கொண்ட அக்மல் இரு தரப்பும் பிரச்சனைகளை குழிதோண்டி புதைத்துவிட்டதாக தான் நம்புவதாகவும், ஆதலால் அம்னோ-பிஎச் ‘கட்டாய திருமணம்’ நீடிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நாம் ஒன்றாக உட்கார்ந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடிந்தால், இந்த உறவு முடிவடைவதை நான் காணவில்லை, என்று அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அம்னோ பாஸ் உடன் முந்தைய இரண்டு அரசாங்கங்களில் ஒன்றாக இருந்தபோதும் இதேதான் நடந்தது. ஆரம்ப கட்டத்தில் இது கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் அதை சமாளித்துவிட்டோம்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் அமைத்த கூட்டணி அரசாங்கத்தில் அம்னோ மற்றும் பிற கூட்டாளிகளில் சபா மற்றும் சரவாக்கின் கட்சிகளும் அடங்கும்.

முதுகில் குத்துவதை விரும்பும் கட்சிகளை விட, உண்மையில் நேர்மையான நபர்களுடன் அம்னோ தன்னை இணைத்துக் கொள்ளும் என்று அக்மல் கூறினார்.

இப்போது அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டதால், அது பொதுமக்களுக்கு உதவுவதையும், முடிந்தவரை அரசியலைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்ய இரு தரப்பினரும் கடமைப்பட்டுள்ளனர். மக்களுக்கு நாங்கள் தேவை, அவர்களின் தேவை நாம் வழங்குவதே நமது கடமை, என்று அக்மல் கூறினார்.

அம்னோ எம்.பி.க்கள் முன்பு பெர்சத்து தலைவர் முஹைதின் யாசின் மற்றும் பின்னர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான இரண்டு முந்தைய அரசாங்கங்களில் பெரிக்காத்தான்  நேசனல் பெர்சாத்து மற்றும் பாஸ் அடங்கிய உடன் கூட்டணி வைத்திருந்தனர்.

பின்னர் அம்னோவிற்கும் பெர்சதுவிற்கும் இடையே உறவுகள் வலுவிழந்தன, அம்னோ முஹைதினின் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று இஸ்மாயில் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைக்க வழிவகுத்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்மாயில், அம்னோ-பிஎச் ‘கட்டாய திருமணம்’ நீடிக்க முடியாது, ஒற்றுமை அரசாங்கத்தில் விரிசல் தோன்றியதாக கூறினார். பரஸ்பர அன்பு இல்லாத ஆளும் கட்சிகளுக்கு இடையிலான கட்டாய திருமணத்தின் விளைவாக இந்த கூட்டாண்மை என்று அவர் விவரித்தார்.

அம்னோ மற்றும் டிஏபி தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டதை அடுத்து இஸ்மாயிலின் கருத்துக்கள் வந்துள்ளன.

கட்டாயத் திருமணம் என்றால் அது நீண்ட காலம் நீடிக்காது. ஒருவரையொருவர் காதலிக்காத இந்த வகையான திருமணத்தை நீங்கள் கட்டாயப்படுத்தினால், விரைவில் விரிசல்கள் தோன்றும், இது விவாகரத்துக்கு வழிவகுக்கும், என்று அவர் கூறினார்.

ஹசன் கரீம்

இருப்பினும், பிகேஆரின் பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் இஸ்மாயிலின் “கட்டாய திருமணம்” ஒப்புமையை குறைத்து மதிப்பிட்டார். அன்வார் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாகவும், டிசம்பரில் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.

இஸ்மாயில் இந்த உண்மையை மறந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று பிகேஆர் நபர் செய்தியாளர்களிடம் கூறினார். அன்வார் அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், உயரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டினால், ஐக்கிய அரசாங்கம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.

ஹோவர்ட் லீ

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்பு அவசியம், என்று மக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர், ஆனால்  எச்சரிக்கையுடன் – அரசாங்கத்தில் உள்ள அம்னோ தலைவர்கள் அச்சம் மற்றும் தயவு இல்லாமல் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை எதிர்கொள்ள வேண்டும் என்று என்று அவர் கூறினார்.

அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் ‘துப்பாக்கியால்’ சுடுவது சகஜம், ஆனால் தேவையற்ற இன உணர்வுகளைத் தூண்டும் என்பதால், ஒற்றுமை அரசாங்கத்தில் இருப்பவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஈப்போ திமோர் எம்பி ஹோவர்ட் லீ கூறினார்.

இரண்டு கட்சிகளுக்கு இடையேயான ‘காதல்’ அல்லது ‘திருமணத்தை’ விட தேசத்தை கட்டியெழுப்புவதில் எங்கள் பணி முக்கியமானது என்று முன்னாள் டிஏபி இளைஞர் தலைவர் கூறினார்.

 

-fmt