WHO: சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன் கோவிட்-19 சுய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்

ஹரி ராயா ஐடில்பித்ரிக்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன், மலேசியர்கள் கோவிட்-19 சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது.

கூடுதலாக, COVID-19 தொற்று முதியவர்களுக்குப் பரவாமல் தடுக்க கைச்சுத்திகரிப்பான்களைப்  பயன்படுத்தவும், முகமூடியை அணியவும் அறிவுறுத்துகிறது.

இந்த விஷயம் அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு @WHOMalaysia மூலம் தெரிவிக்கப்பட்டது, இது சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @KKMPutrajaya மூலம் மறு ட்வீட் செய்யப்பட்டது.

ஏப்ரல் 9 முதல் 15 வரையிலான 15வது தொற்றுநோயியல் வாரத்தில் 100,000 குடியிருப்பாளர்களுக்கு மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்படுவது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 26.2% அதிகரித்துள்ளது

சமீபத்திய அறிக்கையில், பெரும்பாலான நோயாளிகள் வயதானவர்கள் மற்றும் வேறு பிற நோய்கள் கொண்ட நபர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது