நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்படாத ஒப்பந்த மருத்துவர்களுக்கு கடன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் சொந்த கிளினிக்குகளைத் திறக்க மாரா தயாராக இருப்பதாக அதன் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.
மாரா அறிமுகம் செய்த U.n.i (you and I – அதாவது நீங்களும் நானும்) கிளினிக், டென்டல் மற்றும் பார்மசிகள் U.n.i. பிராண்டுகளின் கீழ் கிளைகளைத் திறப்பதன் மூலம் பல மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு மாரா உதயுள்ளது என்று அசிரஃப் கூறினார்.
தொழில்முனைவோருக்கான அரசு நிதியை ஒப்பந்த மருத்துவர்களுக்கு எப்படிச் செலவிடலாம் என்பது குறித்து விரைவில் பூமிபுத்ரா அஜெண்டா ஸ்டீயரிங் யூனிட் தேராஜு, SME வங்கி மற்றும் பெர்பதானன் உசாஹவான் நேஷனல் பெர்ஹாட் ஆகியோரைச் சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிளினிக்கைத் திறக்க, மருத்துவர் மலேசிய மருத்துவக் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனையில் கட்டாய சேவையைப் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் முனைவோர் பயிற்சி, மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் மருத்துவர்கள் இந்தத் தொழிலில் தோல்வியடையாமல் இருக்க ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் அமைப்போம் என்று வட்டாரங்கள் மேற்கோளிட்டுள்ளது.
நாங்கள் விநியோகச் சங்கிலியையும் தயார் செய்வோம், அதனால் வாங்கப்படும் உபகரணங்களின் விலை மிகக் குறைவாக இருக்கும்.
மற்ற தனியார் கிளினிக்குகளைப் போல அதிகமாகவோ அல்லது அரசாங்க கிளினிக்குகளைப் போல மலிவானவை அல்ல என்பதை உறுதிப்படுத்த மாரா மருத்துவர்களின் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் என்று அசிரஃப் கூறினார்.
கட்டணங்கள் B40 மற்றும் M40 வருவாய் குழுக்களுக்கு நியாயமானதாக இருக்கும்.
முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம், 20,333 ஒப்பந்த மருத்துவர்களில் 12,800 பேரை மூன்றாண்டுகளில் நிரந்தரப் பணியிடங்களுக்கு அரசு உள்வாங்கும் என்று அறிவித்தார்.
400,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவாகும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு சொந்தமாக கிளினிக்குகளுக்கு உதவ முடியாததால், நிதியைப் பெற மூன்றாம் தரப்பினருடன் மாரா ஒத்துழைக்க வேண்டும் என்று அசிரஃப் கூறினார்.
இந்த முனைப்பு மருத்துவம் கற்ற மலாய் இன மருத்துவர்களுக்கு மட்டுமா அல்லது மற்ற இனங்களுக்குமா என்பது தெளிவாக இல்லை.
-fmt