பினாங்கு தெற்கு தீவுகள் (Penang South Islands) மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவில்லை என்ற கூற்றைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
குறிப்பாக மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து, மிகவும் விமர்சிக்கப்பட்ட திட்டம்குறித்து தான் கவலை தெரிவித்ததாக அன்வார் வலியுறுத்தினார்.
திட்டத்தின் செயல்முறையை அதன் போக்கில் செல்ல அனுமதிக்கவும்.
“அவர்கள் (பங்குதாரர்கள்) இந்தத் திட்டத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பினால், நாங்கள் (ஒற்றுமை அரசாங்கம்) செவிமடுப்போம், மேலும் மாநில அரசாங்கமும் ஒரு விளக்கத்தை வழங்கும்,” என்று அன்வார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் சுற்றுச்சூழல் துறை (DOE) PSI திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பினாங்கு முதல்வர் சவ் குவான் இயோவ்(Chow Kwon Yeow) புதன்கிழமை அறிவித்தார்.