ஊனமுற்றோருக்காக செனட் சபையை எழுந்து நிற்க செய்த நாயகன்

சக செனட்டர்களை ஒற்றைக்காலில் நிற்கச் சொன்னது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான எண்ணங்களை மாற்றவும் ஒரு தொடக்கப் புள்ளி என்று ஏசாயா ஜேக்கப் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் செனட்டரான ஏசாயா ஜேக்கப், தேர்தல் பிரச்சாரங்களில் தனது மாமா வி டேவிட்டின் காலடிகளை தொடர்ந்து அரசியலில் எப்படித் தொடங்கினார் என்று கூறுகிறார்.

கடந்த மாதம் செனட் தலைவர் உட்பட ஒட்டுமொத்த செனட்டையும் ஒரு நிமிடம் ஒற்றைக்காலில் நிற்க வைத்து தன்னுடன் ஒற்றுமையாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவாகவும் அனைவரையும் இணைத்தார் இருந்தவர் ஏசாயா ஜேக்கப்.

“அதற்குப் பிறகு, சில செனட்டர்கள் என்னைத் தேடி வந்து, செனட் தலைவரை  எழுந்து நிற்கச் சொல்ல நான் மிகவும் தைரியமாக இருந்தேன் என்று என்னிடம் சொன்னார்கள். உண்மையில் அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். எனவே அவர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார்” என்று ஏசாயா கூறினார்.

இந்த தருணம் வெறும் குறியீடாக இல்லாமல், ஊனமுற்றோர் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தவறான எண்ணங்களை மாற்றவும் ஒரு தொடக்க புள்ளியாக இருந்தது.

ஊனமுற்ற இவர் – பிறவியிலேயே இடுப்பு இடப்பெயர்ச்சியுடன் பிறந்தவர். இடைநிலைப் பள்ளி நாட்களிலிருந்தே, தனது மாமா, டிஏபி-யின் மறைந்த வி டேவிட், தேர்தல் பிரச்சாரங்களின் போது, , ஏசாயா அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கவில்லை என்றார்.

தேர்தல் சீர்திருத்தக் குழுவின் பேரணிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், “பல விஷயங்கள் சரியான பாதையில் இல்லை, அதனால் நான் பெர்சே போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டேன்,” என்று அவர் கூறினார்.

நீண்டகால பிகேஆர் உறுப்பினராக இருந்த ஏசாயா, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்சியின் பணியகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

“நிறைய பேர் என்னிடம் வந்து, எங்களுக்கு ஏன் இந்த பணியகம் தேவை என்று கேட்டார்கள். சுற்றிலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருப்பதாகச் சொன்னார்கள், அதனால் அவர்களை மட்டும் ஏன் ஈடுபடுத்தக்கூடாது? ஆனால் என்னைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் அரசியல் களத்தில் இறங்கி தங்கள் சொந்த உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம் இது,” என்றார்.

பணியகம் ஏழு மாநிலங்களுக்குச் சென்று, தேவைப்படும் ஊனமுற்ற உறுப்பினர்களைக் கொண்ட சில குடும்பங்களுக்கு உதவ முடிந்தது என்றார்.

உதாரணமாக, பந்திங்கில் உள்ள வயதான பெற்றோர்கள் மற்றும் மூன்று ஊனமுற்ற குழந்தைகளுடன் உள்ள ஒரு குடும்பம் கடந்த ஆண்டு டிசம்பரில் தன்னால் எப்படி உதவ முடிந்ததுது என்றும் அவர் விவரித்தார்.

“இப்போ மூத்த மகள் வணிக நிர்வாகத்தில் டிப்ளமோ படித்திருக்கிறாள். அவள் சக்கர நாற்காலியில் இருக்கிறாள், அவள் டியூஷன் வகுப்புகளை நடத்துவதற்கு லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டாள், அதனால் நான் அவளுக்கு ஒரு லேப்டாப்பை வாங்கிக் கொடுத்தேன்,” என்றார்.

57 வயதான ஏசாயா, மார்ச் மாதம் செனட்டராக நியமிக்கப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வதர்ற்கு ஒரு தனித்துவமான அரசு துறையை நிறுவுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப் போவதாக  உறுதியளித்தார்.

“அரசாங்கம் இந்த துறையை அங்கீகரிக்க தொடர்ந்து போராடுவேன்”,” என்கிறார் இந்த செனட்டர்.

  • FMT