மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் கிளினிக்  உரிமையாளர் கழுத்து நெரிக்கப்பட்டது

ஒரு தொழிலதிபரின் சடலம் பையில் திணிக்கப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய முக்கிய சந்தேக நபர் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல கிளினிக்குகள் நடத்தும் 41 வயதான ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ஏப்ரல் 26 அன்று ஹுலு லங்காட்டில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அந்த தொழிலதிபரின் உடல் ஒரு பையில் அடைக்கப்பட்டு வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்று செய்தியாளர் கூட்டத்தில், பாதிக்கப்பட்டவரை RM228,000க்கு மிரட்டி பணம் பறிக்க, அவருக்கு தெரிந்த ஒரு நபர் கம்பியால் கழுத்தை நெரித்து கொன்றதாக நம்பப்படுகிறது என்று, சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த 30 வயதுடைய சந்தேக நபர் தனது வழக்கறிஞர்களுக்கு செலுத்த பணம் தேவைப்பட்டதாக கூறினார்.

“சந்தேக நபர், கொல்லப்பட்டவரை ஒரு வியாபாரம் விசயமாக ஏப்ரல் 26 அன்று செமஞ்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சந்திக்குமாறு போலிக்காரணத்தின் கீழ் அழைத்துள்ளார்.

“அதற்குப் பிறகு, கொல்லப்பட்டவர்  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணக்கிற்கு ஒரு தொகையை மாற்றுவதற்காக தன்னுடன் வசிக்கும் நண்பரைத் தொடர்பு கொண்டார்.

“அவரது நண்பர்  சந்தேகம் அடைந்ததால் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதே நாளில் மாண்டவர் மீண்டும் தொடர்பு கொள்ளத் தவறியதால், அவர் ஒரு புகாரை பதிவு செய்தார், ”என்று ஹுசைன் கூறினார்.

சந்தேக நபர் தொழிலதிபரை தனது காரில் தன்னுடன் செல்லும்படி தூண்டியதாக நம்பப்படுவதாக அவர் கூறினார். முதற்கட்ட விசாரணையில் இன்னொரு கூட்டாளி காரில் காத்திருந்தது தெரியவந்தது.

சந்தேக நபர் ஒரு மாண்டவரின் கிளினிக்கில் சீரமைப்பு  பணிகளை மேற்கொண்டதாகவும், அந்த வர்த்தகரின் நிதிப் பின்னணி அவருக்குத் தெரியும் என்றும் ஹுசைன் கூறினார்.

கியோஸ்க்டின் விளம்பரங்கள்

விசாரணையைக்காக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • FMT