ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் ஷரியா வழக்கறிஞர்கள் தலையிட விண்ணப்பம்

கோலாலம்பூர் ஷரியா வழக்கறிஞர்கள் சங்கம், குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றுவதை அனுமதிக்கும் மாநில சட்டங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி 14 வாதிகள் தொடர்ந்த வழக்கில், பங்கு கொள்ள  விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களின் நோக்கம் அந்த ஒருதலை பட்சமான சட்டம் முறையானது என்பதாகும்.

வாதிகள் சார்பில் ஆஜரான ராஜேஷ் நாகராஜன், கடந்த மாத இறுதியில் தலையீடு செய்வதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் உயர்நீதிமன்ற மூத்த உதவிப் பதிவாளர் ஹபிசுல் அவாங் முன் நடந்த வழக்கு நிர்வாகத்தின் போது இன்றுதான் அது தெரிய வந்தது என்று கூறினார்.

நினி ஷிர்மா ரஹ்மத் முன்மொழியப்பட்ட தலையீட்டாளருக்காக ஆஜரானார்.

வாதிகளின் வக்கீல்கள் பதிலளிப்பதற்காக காரண ஆவணங்களை வழங்குமாறு சங்கத்திற்கு ஹஃபிசுல் அறிவுறுத்தியதாக ராஜேஷ் கூறினார்.

இருப்பினும், எனது தரப்புணர் கடுமையாக எதிர்க்குமாறு என்னை அறிவுறுத்தினர். ஏனெனில் இந்த விஷயமானது அரசியலமைப்பு சிக்கல்களை உள்ளடக்கியது, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரண்டு தரப்பினருக்கும் மேலும் வழிமுறை வழங்குவதற்காக ஹஃபிசுல் மற்றொரு வழக்கு நிர்வாகத்தை மே 8 ஆம் தேதிக்கு நிர்ணயித்துள்ளார்.

இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்காக கோத்தா திங்கி  இஸ்லாமியத் துறையின் ஐந்து அதிகாரிகளை மேற்கோள் காட்ட வாதியின் விடுப்பு விண்ணப்பம் மே 17 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த மாதம் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், வாதிகளில் ஒருவரான ஐஸ்யா அலியை அதிகாரிகள் துன்புறுத்தியதாக ஏப்ரல் நடுப்பகுதியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் தரப்பு விண்ணப்பம் கூறியது.

அவர்களின் நடவடிக்கை நியாயமான நீதிக்கு இடையூறாக உள்ளது மற்றும் நாட்டுக்கு அவமரியாதையை காட்டுகிறது என்று வாதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

மார்ச் 29 அன்று நடந்த சம்பவம், நடந்த உடனேயே அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாக ஐஸ்யா காவல்துறையில் புகார் அளித்தார்.

முன்னதாக, மார்ச் 3 ஆம் தேதி, 14 வாதிகள் ஏழு மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக, இரு பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளை இஸ்லாமாக மாற்ற அனுமதிக்கும் மாநில சட்டங்களை ரத்து செய்ய சட்டரீதியான சவாலை தாக்கல் செய்தனர்.

வாதிகளில் இந்து அன்னை எம் இந்திரா காந்தியும் அடங்குவர், அவர் 2018 ஜனவரி 29 அன்று, தனது மூன்று குழந்தைகளை முன்னாள் கணவர் முஹம்மது ரிதுவான் அப்துல்லா ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதை ரத்து செய்ய கூட்டாட்சி நீதிமன்றத்தை தீர்ப்பை வெற்றிகரமாகப் பெற்றார்.

மனுதாரர்கள் குழுவில் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ் மோகன் மற்றும் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழுவும் அடங்கும்.

அவர்களில் இந்து ஆகமம் அணி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அருண் துரைசாமியும் ஒருவர். இந்திரா காந்தி குழுவின் தலைவராகவும் உள்ளார்.

மீதமுள்ள வாதிகள் பெர்லிஸ், கெடா, மேலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் வசிக்கும் நபர்கள் ஆவர்.

பெர்லிஸ், கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், ஜொகூர் ஆகிய மாநில அரசுகளையும், மத்திய அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டனர்.

ஒருதலைப்பட்சமான மதமாற்றங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 12(4) வது பிரிவை மீறுவதாகவும் அறிவிக்க வேண்டும் என்று வாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-fmt