மகாதீர் ஒரு தேவையற்ற சுமை – ஜாஹிட்

முன்னாள் பிரதமரின் “மலாய் பிரகடனத்தை” நிராகரித்த ஜாஹிட், அரசியல் தளத்தில் மகாதீரின் பிரகடனத்தை விட ஐக்கிய அரசாங்கத்திற்கு பெரிய “அர்த்தம்” இருப்பதாக ஜாஹிட் கூறினார்.

ஆனால் மகாதீரால் , பாஸ் மற்றும் பெர்சத்து தலைவர்கள் மற்றும் அன்னுார் மூசா மற்றும் சுரைடா கமருடின் போன்ற தனிநபர்களின் ஆதரவைப் பெற முடிந்தது.

“பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் மகாதீரின் சமீபத்திய சந்திப்புக்கு  நான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், மலேசிய அரசியலில்  மகாதீர் ஒரு தேவயற்ற சுமை என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால் இதைச் சொல்கிறேன்”.

லங்காவியில் 15வது பொதுத் தேர்தலின் போது அவர் டெபாசிட் இழந்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அவரது கட்சி வேட்பாளர்கள் யாரும் ஒரு இடத்தை கூடப் பெறவில்லை.

இந்தக் கூட்டம் ‘மலாய் பிரகடனம்’ தொடர்பாக உண்மையிலேயே மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதாக இருந்தால், அம்னோ மிகப் பெரிய மலாய்-பூமிபுத்ரா கட்சி என்பதையும், ஒற்றுமை அரசாங்கம் நாட்டிற்கு அதிக அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.”

மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் மற்றும் சமூகத்தை “காப்பாற்ற வேண்டும்” என்ற அவரது அழைப்புக்கு தங்கள் ஆதரவைக் குறிக்கும் வகையில் முன்னாள் லங்காவி எம்பி முன்னிலையில் ஹாடி மற்றும் பிற பாஸ் தலைவர்கள் மகாதீரின் “மலாய் பிரகடனத்தில்” கையெழுத்திட்டது குறித்து அவர் இவ்வாறாக கருத்து தெரிவித்தார்.

மூன்று பெர்சத்து தலைவர்கள் – துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் மற்றும் உச்ச கவுன்சில் உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித் – ஆகியோரும் தங்கள் தனிப்பட்ட திறன்களில் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசியல் நிலைத்தன்மை வேண்டும் என்று ஜாஹிட் அழைப்பு விடுத்தார், இது கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டைப் பெரிதும் பாதித்தது, ஐந்து ஆண்டுகளில் மலேசியா மூன்று பிரதமர்களைப் கண்டுள்ளது.

தேசம் முன்னேறவும், அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான ஜொகூர் ஆட்சியாளரின் அழைப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் செவிசாய்க்க வேண்டும் என்றும் துணைப் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

“148 எம்.பி.க்கள் ஆதரவுடன் இப்போது அரசாங்கம் நிலைத்தன்மையுடன் உள்ளது, இந்த ஆதரவு மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.”

-fmt