கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆண்டை முடிவுற்கு கொண்டு வரும் டிசம்பர் மாதத்தில் தவறாமல் ஒரு செய்திநாயகரை மலேசியாகினி தெரிவுசெய்துள்ளது.
“செயல்பாடுகள் வழி தலைப்புச் செய்திகளை உருவாக்குகின்றவர், பொது விவாதங்களின் போக்கில் விளைவுகளை ஏற்படுத்துகின்றவர் மற்றும் மலேசிய அரசியலில், நல்லதற்கோ தீயதற்கோ, தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்”, செயல்நாயகர் என்று வர்ணிக்கப்படுகிறார்.
இது வரையில் மலேசியாகினி பின்பற்றி வந்த பாரம்பரியத்தை கைவிட்டு, 2011 ஆண்டில் எழுவர் அடங்கிய பட்டியலிலிருந்து தாங்கள் விரும்பியவரை தேர்வு செய்யும் வாய்ப்பு மலேசியாகினி வாசகர்களிடம் விடப்பட்டது.
பலர் எதிர்பார்த்தவாறு, அது உண்மையில் ஓர் இரு-முனை போட்டியாக அமைந்து விட்டது.
போட்டியாளர் இருவரும் சம்பந்தப்பட்டவர்கள் – ஒருவர் தனிப்பட்டவர்; ஓர் இயக்கத்தின் முக்கியமானவராக பரந்த அளவில் கருதப்பட்டவர்; மற்றவர்கள் 50,000 மக்கள். இரசாயனம் கலந்த நீர் மற்றும் கண்ணீர் புகைக்குண்டு ஆகியவற்றை கோலாலம்பூர் தெருக்களில் துணிச்சலோடு எதிர்கொண்டு தேர்தல் மோசடிக்கு “இடம் இல்லை” என்று அந்த ஜூலை நாளில் முழங்கிய நாட்டு மக்கள்.
நேற்று, மலேசியாகினி வாசகர்கள் பெர்சே இயக்கத்தை 2011 ஆண்டின் உன்னதச் செய்தியாக தேர்வு செய்தனர்.
இவ்வாண்டு செய்திநாயகரின் தேர்வு பெர்சேயின் ஒருங்கிணைப்பாளர் அம்பிகா சீனிவாசன் மற்றும் பெர்சே ஆதரவாளர்களுக்கிடையிலானது என்பதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை.
ஆக, செய்திநாயர் 2011 விருதைத் பெறுபவர், “பெறுபவர்கள்” என்றிருக்க வேண்டும், பெர்சே ஆதரவாளர்கள்!
ஐந்து நாட்களாக நடந்த இத்தேர்வில் 1,222 மலேசியாகினி வாசகர்கள் பங்கேற்றனர். அவர்களில் 491 பேர் பெர்சே ஆதரவாளர்களை தேர்வு செய்த வேளையில், 305 பேர் அம்பிகாவுக்கு வாக்களித்தனர்.
“முதல் பெண்மணி” ரோஸ்மா மன்சோர் 181 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரைப் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகள், அவற்றில் முதன்மையானது ரிம24 மில்லியன் மதிப்புடைய வைர மோதிரம், அவருக்கு உதவி இருக்கலாம்.
செய்திநாயகருக்கான விருது ஒரு தனிப்பட்டவருக்கு இல்லாமல் ஒரு குழுவினருக்கு வழங்கப்படுவது இது இரண்டாவது ஆண்டாகும்.
2008 ஆம் ஆண்டில், “சிந்திக்ககூடாததைச் சிந்தித்தும், அதை அடைவதற்கான துணிச்சலைப் பெற்றும்” நாட்டில் வீசிய அரசியல் சுனாமியின் வழியில் “நீங்கள்” (“You”) செய்திநாயகர்களாக மலேசியாகினியால் தேர்வு செய்யப்பட்டீர்.
இப்போதையப் பெருங்கேள்வி இதுதான்: “நீங்கள்” (“You”) மீண்டும் 2012 ஆம் ஆண்டின் செய்திநாயகர்கள் என்ற விருதைப் பெறுவீர்களா?