கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 3% அதிகரிப்பு: சுகாதாரத்துறை டி.ஜி.

ஏப்ரல் 23 முதல் 29 வரையிலான 17 வது தொற்றுநோயியல் வாரத்தில் பதிவான கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை, முந்தைய வாரத்தில் 4,817 நேர்வுகளிலிருந்து 3% அதிகரித்து, பண்டிகை காலம் காரணமாக 4,963 நேர்வுகளாக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் நெருக்கடி தயார்நிலை மற்றும் மறுமொழி மையத்தின் (Crisis Preparedness and Response Centre) தரவுகளின் அடிப்படையில், கோவிட் -19 நோயாளிகளின் பொது சுகாதார வசதிகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 100,000 மக்கள்தொகைக்கு 4.8% இருந்து 5.8% அதிகரித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹசன்(Dr Muhammad Radzi Abu Hassan) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“வகை ஒன்று மற்றும் இரண்டு நோயாளிகள் 1.4 % இருந்து 1.8 சதவீதமாகவும், மூன்றாம், நான்கு மற்றும் ஐந்து வகை நோயாளிகள் 1.3 சதவீதத்திலிருந்து 2.0 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர்,” என்று அவர் கூறினார். கோவிட் -19 வசதிகளில் படுக்கை பயன்பாட்டு சதவீதம் சிக்கலற்ற மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) நோயாளிகளுக்கு மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 0.2% அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களாக இருந்தனர், ஆனால் இது சுகாதார சேவைகளுக்குச் சுமையாக இல்லை என்றும் மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, மலேசியாவில் கோவிட் -19 நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவமனை திறன் பாதிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சமீபத்திய ஹரி ராய ஐடில்பிட்ரி மற்றும் விசாக் தின கொண்டாட்டங்களின்போது இயக்கம் மற்றும் கூட்டங்களைத் தொடர்ந்து கோவிட் -19 நேர்வுகளில் லேசான அதிகரிப்பு ஏற்படும் என்று அமைச்சு கணித்துள்ளது, மேலும் தங்கள் குடும்பங்கள், அயலவர்கள் மற்றும் நண்பர்களைக் கோவிட் -19 தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாக்க வருகை நடவடிக்கைகளின்போது அறிகுறிகள் இருந்தால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.