கைதிகளிடையே மீண்டும் மீண்டும் நிகழும் குற்றங்களைக் குறைக்க 2030 க்குள் சமூக மறுவாழ்வு அணுகுமுறை மலேசிய சிறைத் துறையின் முக்கிய தேர்வாக இருக்கும் என்று சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் நோர்டின் முகமட்(Nordin Muhamad) கூறினார்.
தற்போதைய சிறைவாச முறையைவிட இந்த முறை 50 மடங்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“2030 க்குள், தகுதிவாய்ந்த கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சமூகத்தில் மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம், சிறைவாசம் மட்டுமே கடைசி சீர்திருத்த விருப்பமாக இருக்கும்”.
“சமூகத்தில் மூலோபாய ஒருங்கிணைப்பு மூலம் மறுவாழ்வு முயற்சிகளுக்கு முக்கிய விருப்பம் வழங்கப்படும், இது தற்போது மறுசீரமைப்பு விகிதத்தைக் குறைப்பதில் 50 மடங்கு அதிக செயல்திறனைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
நேற்று சிலாங்கூரில் சுங்கை புலோ சிறைச்சாலையின் முராத் அகமட் மண்டபத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் சிறைத்துறையின் ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்ட விழாவில் அவர் பேசினார்.
உள்துறை அமைச்சர் சைபுடின் நசூன் இஸ்மாயில் மற்றும் அவரது துணை அமைச்சர் ஷம்சுல் அனுவார் நஸாரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நோர்டினின் கூற்றுப்படி, இந்த முயற்சி தீவிரமாகச் செயல்படுத்தப்படும் துறையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது.
இதற்கிடையில், நாட்டில் உள்ள சிறைத்துறை ஊழியர்களின் குடியிருப்புகளைப் புதுப்பிக்க 2023 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரிம50 மில்லியன் நிதியை ஒதுக்கியதற்காகப் பிரதமருக்கு நோர்டின் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“இந்தத் தொகையிலிருந்து, சுங்கை புலோ சிறைச்சாலையில் உள்ள ஊழியர் குடியிருப்புகளைப் பழுதுபார்க்க ரிம12 மில்லியன் செலவிடப்படும்,” என்று அவர் கூறினார்.