மே 1 ஆம் தேதி தீப்பிடித்து எரிந்த எண்ணெய் டேங்கர் எம்.டி பப்லோ (MT Pablo)வின் காணாமல் போன மூன்று ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை (The search and rescue operation) புதிய தடயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜொகூர் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (Malaysian Maritime Enforcement Agency) இயக்குநர் நூருல் ஹிசாம் ஜக்காரியா(Nurul Hizam Zakaria), ஐந்தாவது நாளை எட்டிய இந்த நடவடிக்கை மே 5 அன்று இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டது என்றார்.
நேற்று, கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், காணாமல் போன மூன்று ஊழியர்களும் இன்னும் கப்பலில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
“கப்பலின் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், ஜொகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையம் புதிய தடயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
தேடுதல் பணியில் 31 MMEA அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அபாயகரமான பொருள் (Hazmat) பிரிவைச் சேர்ந்த 11 பணியாளர்கள் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
காணாமல் போன மூன்று ஊழியர்கள் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் – சத்யம் திரிபாதி, 26, மற்றும் தினேஷ் குமார் சவுகான், 34; மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சபித் ஷெண்டெரோவ்ஸ்கி(37).
ஆப்பிரிக்காவின் காபோனில் பதிவு செய்யப்பட்ட எம்.டி பப்லோ(MT Pablo) என்ற டேங்கர் மே 1 அன்று கோத்தா திங்கியின் தஞ்சோங் செடிலிக்கு வடகிழக்கில் சுமார் 37.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்து எரிந்தது.