திவாலானவர்களுக்கு EPF பிணையத்தின் ஆதரவுடன் கடன்கள் அனுமதிக்கப்படுகின்றன – வான் சைஃபுல்

திவாலான நிலையில் உள்ள தனிநபர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது i-Cagar FSA2 EPF பிணையத் திட்டத்தின் கீழ் எவ்வாறு கடன் பெற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குமாறு புத்ராஜெயாவிடம் வலியுறுத்தப்பட்டது.

நேற்றிரவு ஒரு அறிக்கையில், பெர்சத்து தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான்(Wan Saiful Wan Jan), அத்தகைய நபர்களைச் சமீபத்தில் சந்தித்ததாகக் கூறினார்.

வான் சைஃபுல்(Wan Saiful) காட்டிய வங்கி விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட்டின் அடிப்படையில், EPF கணக்கு 2 ஆதரவு வசதித் திட்டத்தை (FSA2) பயன்படுத்தி சில கடன் வாங்குபவர்கள் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பைத் தாண்டிக் கடன் வாங்கியுள்ளனர்

வான் சைபுல், சம்பந்தப்பட்ட கடனாளிகளும் திவாலான திறையிடமிருந்து இருந்து வெளியீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் வரை அவர்களது கடனை அணுக அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

“திவால்நிலை காரணமாக அவர்கள் (கடன் வழங்க) தகுதியற்றவர்கள் என்றால், கடன் ஏன் அங்கீகரிக்கப்பட்டது? கடன் அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நிதி அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது,” என்று முன்னாள் பெர்சத்து தகவல் தலைவர் கூறினார்.

புத்ராஜெயா EPF உறுப்பினர்களுக்கு வங்கி நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட நிதியுதவியைப் பெற உதவ FSA2 ஐ அறிமுகப்படுத்தியது. MBSB மற்றும் Bank Simpanan Nasional ஆகிய இரண்டு வங்கிகள் மட்டுமே FSA2 ஐ வழங்குகின்றன.

கடன் வாங்குபவர்கள் தங்களின் EPF கணக்கு 2 இருப்பின் அடிப்படையில் ரிம50,000 வரை கடன் பெறலாம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தை 10 ஆண்டுகள்வரை நீட்டிக்கலாம்.

வழக்கமான விகிதத்தைவிட (8% முதல் 15% வரை) வட்டி 4% முதல் 5% வரை வசூலிக்கப்படும்

அதிகரித்த நிதி நெருக்கடிகள்

இதற்கிடையில், திவாலான நபர்கள் தங்கள் EPF ஐ பிணையமாகப் பயன்படுத்தி கடன் வாங்க அனுமதிப்பது அவர்களின் நிதி சிக்கல்களை மட்டுமே சேர்க்கும் என்று வான் சைபுல் கூறினார்.

4.5 சதவிகிதம் மற்றும் ஒன்பது ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலகட்டம் என்ற விகிதத்தில் RM18,000 கடன் வாங்கிய ஒரு நபரின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, வான் சைஃபுல், திருப்பிச் செலுத்தும் காலத்தின் முடிவில் தனிநபர் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என்றார்.

“மக்கள் பாதிக்கப்படும் குழப்பமான கொள்கைகளை அவரது அரசாங்கம் ஏன் அறிமுகப்படுத்தியது என்பதை விளக்குமாறு பிரதமரையும் நிதியமைச்சர் அன்வார் இப்ராகிமையும் கேட்டுக்கொள்கிறேன்”.

“இதற்கு முன் ஒரு பிரதமர் திவாலான நபர்களுக்கு அவர்களின் கடனை அதிகரிப்பதன் மூலம் தீர்வை வழங்கியதில்லை,” என்று வான் சைபுல் கூறினார்.

FSA2 திட்டத்தை ரத்து செய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், அதற்குப் பதிலாக இலக்கு EPF திரும்பப் பெறுதல் தேவைப்படுபவர்களால் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின்போது வருமான இழப்புகளைச் சமாளிக்க முந்தைய நிர்வாகங்கள் அறிமுகப்படுத்திய மற்றொரு சுற்று EPF திரும்பப் பெறுவதற்கான பரிந்துரைகளைப் புத்ராஜெயா முன்பு நிராகரித்தது.