சனுசி: சிலாங்கூர் PN MB வேட்பாளர் ‘உள்ளூர்’ ஆவார்

சிலாங்கூர் மந்திரி பெசார் ஒரு “உண்மையான” சிலாங்கூரியராக இருப்பார் என்று பாஸ் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர்(Muhammad Sanusi Md Nor) உறுதியளித்துள்ளார்.

நேற்றிரவு ஷா ஆலமில் சிலாங்கூர் பாஸ் ஐடில்பித்ரி திறந்த இல்லத்தில் பேசிய அவர், ஒரு உள்ளூர்வாசி அல்லது மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஒருவர் மட்டுமே உள்ளூர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வார் என்றார்.

கெடா மந்திரி பெசாரான சனுசியும் (மேலே), டாக்டர் ஹலிமா அலி போட்டியிடுவதை சூசகமாகச் சுட்டிக்காட்டினார்.

“சரவாக்கியர்கள் (பதவியை வகிக்க முடியாது) என்று நான் ஒருபோதும் கூறவில்லை. ஒருவேளை (வேட்பாளர்) சிலாங்கூரில் நீண்ட காலமாக வாழ்ந்திருக்கலாம், அவரைக் கருத்தில் கொள்ளலாம்”.

“ஆனால் சிலாங்கூர் சுவை, வாழ்க்கை முறை மற்றும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஒரு உள்ளூர் மக்களால் வழிநடத்தப்பட்டால் நன்றாக இருக்கும்,” என்று அவர் கூறினார் என்று சினார் ஹரியான் மேற்கொள்ளிட்டது.

62 வயதாகும் ஹலிமா பாஸ் கட்சியின் மத்தியக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். சரவாக்கில் உள்ள மாருடியில் பிறந்த இவர், தனது மருத்துவப் பயிற்சி மற்றும் செயல்பாட்டின் மூலம் சிலாங்கூரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இவர் சிலாட் கிள்ளான் மற்றும் பின்னர் செரி சேதியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு முறை மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நவம்பர் 2022 இல், பக்காத்தான் ஹராப்பானிலிருந்து கபார் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் பாஸ் தலைவர் அஹ்மத் யூனுஸ் ஹைரி, பல பெரிய அரசியல் பிரமுகர்கள் உறுப்பினர்களாக இருக்க விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், விண்ணப்பதாரர்கள் இந்த நிகழ்வில் இருந்தார்களா என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.

முன்னாள் BN பொதுச் செயலாளர் அன்வார் மூசா, சிலாங்கூர் அம்னோவின் முன்னாள் தலைவர் நோ ஒமர், முன்னாள் பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷாஹிதான் காசிம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தஞ்சோங் கரங் பகுதியில்  PNக்கு ஆதரவளிப்பதாக நோ உறுதியளித்துள்ளார், அதே நேரத்தில் ஷாஹிதான் அடிக்கடி செமெனிஹ் பகுதியில் காணப்படுகிறார்.