5 அரசுகள் மாறினாலும் அகதிகளின் நிலை மாறவில்லை

அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது தொடர்பான அரசாங்க அறிவிப்புக்கு ஆறு ஆண்டுகள் கழித்தும், அகதிகள் இன்னும் விரக்தியில் வாழ்கின்றனர் என்று ஆகா அண்டுல் சத்தார் தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனல் அரசாங்கம் 2017 ஆம் ஆண்டில் அகதிகள் வேலை செய்வதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவித்தபோது, மாற்றம் உதயமாகிறது என்று  நம்பினோம்.

ஆனால் பின்னர் ஐந்து அரசாங்கங்கள் மாற்றப்பட்டன, எதுவும் மாறவில்லை.

நாங்கள் பல ஆண்டுகளாக பயம் மற்றும் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறோம், எங்கள் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம், மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க தோட்டத் துறையில் தற்காலிகமாக பணிபுரிய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக கடந்த மாதம் துணைப் பிரதமர் ஃபதில்லா யூசுப் தெரிவித்தார்.

ஆகா அந்துல் சத்தார்

ஆனால் அவர் நம்பிக்கையுடன் இல்லை என்று தெரிவித்துள்ளார். மலேசியாவில் உள்ள அகதிகளை வேலை செய்ய அனுமதிக்க மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு உட்பட பல முன்மொழிவுகள் நிறைவேற்றப்படவில்லை.

தன்னார்வல தொண்டு நிறுவங்களின் நார்த்-சவுத் முன்முயற்சியின் சமூக ஒருங்கிணைப்பாளரும் சமூக மேம்பாட்டாளருமான ஆகா, சில முதலாளிகள் அகதிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்காத நிலையில் ஒற்றைப்படை வேலைகள் கூட கிடைப்பது கடினம் என்று கூறினார்.

அகதிகளை தொழிலாளர் தொகுப்பில் சேர்ப்பதற்கும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

“எங்களுக்குத் தகுதியான ஆதரவையும் பாதுகாப்பையும் எங்களுக்கு வழங்குங்கள். நாங்களும் மனிதர்கள்தான், கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ தகுதியானவர்கள்” என்றார்.

அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தின் கீழ் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையவில்லை என்று மியான்மரில் உள்ள சின் சமூகத்தைச் சேர்ந்த அகதியான கை சியான் பாவ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான், கடந்த காலங்களில் அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ளது, இது வேலை செய்யும் உரிமை உட்பட அகதிகளின் உரிமைகளை கோடிட்டுக் காட்டுகிறது.

“அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டால், சுரண்டல் மற்றும் வேலைவாய்ப்பு மோதல்கள் குறைக்கப்படலாம்” என்று காய் கூறினார்.

மலேசியாவில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரின் கூற்றுப்படி, நாட்டில் சுமார் 183,000 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர், அவர்களில் 85% பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், இதில் சுமார் 103,000 ரோஹிங்கியாக்கள் உள்ளனர்.

 

 

-fmt