சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கக் கட்டிடங்களின் மின் கட்டணத்தைக் குறைக்க மொத்தம் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
“இந்த ஆண்டுக்குள் அரசாங்க கட்டிடங்களை மேம்படுத்துவதற்கும் மாற்றுவதற்கும் ரிம50 மில்லியன் ஒதுக்கப்படும்,” என்று ரஃபிஸி கூறினார்.
மின்சார விநியோக அமைப்பில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திறன் 2050 க்குள் சுமார் 70 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.