அசாம் ஒப்பந்த நீட்டிப்பு, பங்குகள் சர்ச்சைக்குரியது அல்ல என்பதை நிரூபிக்கிறது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக அசாம்  பாக்கியின் ஒப்பந்தம் நீட்டிப்பு, பங்குகள் மீதான அவரது உரிமை குறித்த சர்ச்சை ஒரு பிரச்சினை அல்ல என்பதை நிரூபிக்கிறது என்று பாஸ் கூறுகிறது.

பாஸ் பொதுச்செயலாளர் தகியுதீன் ஹாசன் கூறுகையில், தவறான நடத்தை மற்றும் பங்குகள் உரிமை பற்றிய குற்றச்சாட்டுகள் அசாம் மீது சுமத்தப்பட்டாலும், அரசு அவர் செய்த தவறை மறுத்ததை ஏற்றுக்கொண்டது.

“அவரது பதவி நீட்டிப்பு,  சில இலக்குகளை அடைய விரும்பும் பொறுப்பற்ற கட்சிகளால் அவர் மீதும் எம்ஏசிசி மீதும் ஏற்படுத்தப்பட்ட எதிர்மறையான கருத்துக்களில் இருந்து அவர் குற்றமற்றவர் என்று  உறுதிப்படுத்துகிறது என்று பாஸ்  நம்புகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

நேற்று, எம்ஏசிசி தலைவராக அசாமின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அவரது ஒப்பந்தம் மே 12ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

ஒப்பந்த நீட்டிப்புக்கு யாங் டி-பெர்டுவான் அகோங் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜூகி அலி தெரிவித்தார்.

முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவரது முன்னோடி லத்தீபா கோயா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2020 மார்ச் 9 அன்று, எம்ஏசிசி தலைமை ஆணையராக அசாம் நியமிக்கப்பட்டார்.

2021 இன் பிற்பகுதியில், கணிசமான அளவு பங்குகள் மற்றும் வாரண்டுகளை வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அசாம் பற்றி தலைப்புச் செய்திகளை வெளிவந்தன.

அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்தார், ஆனால் பல கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் இந்த விஷயத்தில் விசாரணையைத் திறக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

மூன்று வெவ்வேறு எம்ஏசிசி கமிட்டிகளால் அசாம் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அப்போதைய சட்ட மந்திரி வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், பத்திரங்கள் ஆணையம் மலேசியா எந்த வழக்கும் இல்லை என்று முடிவு செய்த பிறகு பிரச்சினை தீர்க்கப்பட்டது என்றார்.

அஆசாமின் ஒருமைப்பாடு மற்றும் எம்ஏசிசி ஒரு முக்கியமான தேசிய நிறுவனம் மீது சந்தேகம் எழுப்ப சில தரப்பினரால் முயற்சிகள் நடந்ததாக தகியுதீன் கூறினார்.

ஒப்பந்த நீட்டிப்பை பாஸ் வரவேற்பதாகவும், அசாம் நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றுவார் என்றும், ஊழல் தடுப்பு நிறுவனத்தை முன்மாதிரியான முறையில் வழிநடத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-fmt