தேவைப்பட்டால், வெப்ப நிலை குறித்து அரசு அவசர கால பிரகடணத்தை அறிவிக்கும் – ஜாஹிட்

தற்போதைய நிலவிவரும் கடும் வெயிலை அவசரநிலையாக அறிவிக்க அரசு தயாராக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

“தற்போதைக்கு இல்லை, ஆனால் அரசு தயாராக உள்ளது.

“இதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவு எண். 20 ஐப் பயன்படுத்துவோம்.

“அரசு 24 மணி நேரமும் வெப்ப அலையை கண்காணித்து வருகிறது. அவசரநிலை ஏற்பட்டால் அறிவிப்போம். தற்போதைக்கு இல்லை,” என்று இன்று மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் ஜாஹிட் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

ஏழு அணைகளில் நீர்மட்டத்தை அதிகரிக்க செயற்கை மழை விதைப்பு உடனடியாக மேற்கொள்ளப்படும்.

MKN இன் உத்தரவு எண். 20 என்பது பேரிடர் மேலாண்மை பொறிமுறையாகும், இது கூட்டாட்சி, மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுக்களின்  பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தினசரி வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததை அடுத்து, மலேசியாவில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு நேற்று வானிலை ஆய்வுத் துறை மெட்மலேசியா முதல் நிலை வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டது.

பகாங்கில் உள்ள பெக்கான், பெரா மற்றும் ரோம்பின் மாவட்டங்கள்; ஜோகூரில் செகாமட் மற்றும் மூவார்; கிளந்தனில் பாசிர் மாஸ் மற்றும் குவாலா க்ரை; மற்றும் கெடாவில் உள்ள பதங் தேராப்.