கிளந்தான் காவலர்கள் ரிம29,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்து 312 பேர் கைது செய்தனர்

வெள்ளிக்கிழமை (மே 12) முதல் நேற்று வரை மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட ஓ.பி.டாபிஸின்(Op Tapis) கீழ் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் கிளந்தான் போலீசார் ரிம297,776.10 மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின்போது 303 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் உட்பட 14 முதல் 68 வயதுடைய 312 நபர்கள் கைது செய்யப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாகி ஹருன் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஹெராயின் (23.45 கிராம்), கஞ்சா (2.25 கிராம்), யாபா மாத்திரை தூள் (10.99 கிராம்), சைக்கோட்ரோபிக் மாத்திரைகள் (125 மாத்திரைகள்), கோடீன் (3.2 லிட்டர்), சியாபு (24.68 கிராம்), கேதும் இலைகள் (4.7 கிலோகிராம்), கெட்டம் நீர் (426.1 லிட்டர்) மற்றும் யாபா மாத்திரைகள் (426.1 லிட்டர்) ஆகியவை அடங்கும்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் (Dangerous Drugs Act) 1952 இன் பிரிவு 39 பி இன் கீழ் எட்டு கைதுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன”.

“பிரிவு 15 (1) (a) ADB 1952 இன் கீழ் 115 கைதுகள் பதிவாகியுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மொத்தம் 28,966 போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஜாகி கூறினார்.

இந்த நடவடிக்கையின்போது 21 ஹார்ட்கோர் அல்லது மீண்டும் போதைக்கு அடிமையானவர்கள் மீது ADB 1952 இன் பிரிவு 39C இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது, அங்குப் பணம், கணக்கில் உள்ள பணம் மற்றும் வாகனங்கள் 83,164.46 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன”.

“இந்த வெற்றி அனைத்து மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய தொடர்ச்சியான நடவடிக்கையின் விளைவாகும்”.

“கிளந்தான் போலிஸ் பிரிவு, குறிப்பாகப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (Narcotics Criminal Investigation Department) மாநிலத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட தொடர்ந்து பணியாற்றும்,” என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 012-208 7222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் ஊடாகத் தொடர்ந்தும் வழங்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.