‘அன்வார் தி அன்டோல்ட் ஸ்டோரி’ படம் பார்க்க சகிக்கவில்லை –  கைருதீன்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் விசுவாசி ஒருவர் ‘அன்வார்: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தை ஒரு “பயனற்ற, குமட்டல்” என்று விமர்சித்துள்ளார்.

கைருதீன் அபு ஹாசனின் கூற்றுப்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கடினமான அரசியல் பயணத்தை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு, மகாதீரின் இமேஜை அவதூறு செய்வதையும் களங்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

“அன்வர்: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தைப் பார்த்து முடித்தேன், அது குமட்டலாக இருந்தது.”

“படம் அவரை (அன்வார்) ஒரு காட்பாதர் (உயரிய தந்தை) நிலைக்கு உயர்த்துகிறது” என்று கைருதீன் (மேலே) இன்று ட்விட்டரில் எழுதினார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் கூட்டரசு பிரதேச பெஜுவாங் தலைவர், இந்தோனேசிய இயக்குனர் விவா வெஸ்டி இயக்கிய திரைப்படத்தில் பல தவறுகள் இருப்பதாகக் கூறினார்.

“இந்த திரைப்படம் ஆராய்ச்சியின்றி தயாரிக்கப்பட்டது மற்றும் நிறைய தவறான உண்மைகளைக் கொண்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

1993 மற்றும் 1998 க்கு இடைப்பட்ட காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்தத் திரைப்படம், அன்வர் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சராக இருந்த காலத்தில், ஊழலுக்கு எதிரான அவரது போராட்டத்தின் கதையைச் சொல்கிறது.

நேற்று நாடு முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.   நட்சத்திரங்கள் நிறைந்த வரிசையில் ஃபரித் கமில் அன்வராகவும், அச்சா செப்ட்ரியாசா (வான் அசிசா வான் இப்ராஹிம்), ஹஸ்னுல் ரஹ்மத் (மகாதீர்), பீட் பகாவ் (அன்வாரின் தந்தை) மற்றும் சாஸ்கியா சாட்விக் (நூருல் இசா) ஆகியோரும் அடங்குவர்.

உள்ளூர் படத்தை ஒரு இந்தோனேசியரால் வைத்து ஏன் எடுக்கப்பட்டது  என்றும் கைருதீன் கேள்வி எழுப்பினார்.

“எனக்கு ஒரு இந்தோனேசியப் படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. ஏனென்றால் நடிகர்கள் பஹாசா மெலாயுவில் பேச கடுமையாக முயற்சித்தார்கள், ஆனால் அது மோசமாக இருந்தது.

“இதற்குக் காரணம் 99 சதவீத நடிகர்கள் இந்தோனேசியர்கள், இந்தப் படத்தை எடுக்க உள்ளூர் இயக்குநர்கள் இல்லையா? திரைக்கதை எழுதியவர் யார்?

மேலும், படத்தின் கிட்டத்தட்ட 95 சதவீத படப்பிடிப்பு இந்தோனேசியாவில் படமாக்கப்பட்டது. இப்படி பல கேள்விகளை கேட்கிறார் இந்த மகதீரின் ஆதரவாளர்.