பகடிவதையில் ஈடுபட்ட அனைத்து எம்ஆர்எஸ்எம் மாணவர்களும் வெளியேற்றப்படுவர் – அசிரப் வாஜ்தி

பினாங்கு பாலிக் புலாவில் உள்ள மக்தாப் ரெண்டா சைன்ஸ் மாராவில் (எம்ஆர்எஸ்எம்,) சமீபத்தில் படிவம் மூன்று மாணவரை கொடுமைப்படுத்திய வழக்கில் தொடர்புடைய அனைத்து படிவம் ஐந்து மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள்.

MRSM உட்பட மாராவின் கீழ் உள்ள கல்வி நிறுவனம் கொடுமைப்படுத்துதல் மற்றும் அடிதடி போன்றவைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று மாரா தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

“மாராவின் கல்விப் பிரிவில் இருந்து எனக்கு ஏற்கனவே ஒரு அறிக்கை வந்துள்ளது, இதில் ஈடுபட்ட அனைவரையும் MRSM இலிருந்து வெளியேற்ற முன்மொழியப்பட்டது.

இன்று ஒரு முகநூல் பதிவில் அசிரஃப் கூறுகையில், “இந்த வழக்கை மூடிமறைக்க எந்த முயற்சியும் இல்லை என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொடுமைப்படுத்துதல் வழக்கின் விசாரணையை எளிதாக்குவதற்காக பாலிக் புலாவில் ஐந்து எம்ஆர்எஸ்எம் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை காவல்துறை சமீபத்தில் உறுதி செய்தது.

பள்ளி கட்டிடத்தின் B பிளாக்கில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இரவு 11 மணியளவில் நடந்த சம்பவத்தில், படிவம் மூன்று மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

காலை தொழுகைக்கு தாமதமாக வந்ததால் பாதிக்கப்பட்டவர் ஐந்து படிவம் மாணவர்களால் தாக்கப்பட்டார்.

பாரட் டாயா காவல்துறை மாவட்டத் தலைவர் கமருல் ரிசால் ஜெனால் அறிக்கை மற்றும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.