இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைவதை உறுதி செய்வதற்காக, முதலில் Boustead Naval Shipyard Sdn Bhd (BNS) கீழ் உள்ள littoral combat ship (LCS) திட்டத்தின் கட்டுமானத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை.
இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் ரிம6 பில்லியன் செலவிட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
“LCS உட்பட முடிக்கப்பட வேண்டிய திட்டங்களை இது (Boustead) கொண்டுள்ளது.
“எங்களுக்கு (அரசாங்கம்) வேறு வழியில்லை, நாங்கள் ரிம6 பில்லியன் செலவழித்துள்ளோம், அதை (LCS திட்டம்) மூட முடியாது.
“நாங்கள் பொறுப்பேற்க வேண்டும், நாங்கள் அதை முடிக்க வேண்டும்,” என்று அவர் இன்று WTCKL இல் கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த விசயம் தொடர்பில் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.