மக்காவ் ஊழல் சிண்டிகேட்டிடம் ரிம150,000-ஐ ஆசிரியர் இழந்தார்

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி போல் நடித்து மோசடி செய்து ஆசிரியர் ரிம187,000 இழந்தார்.

36 வயதான பாதிக்கப்பட்ட பெண், மே 10 அன்று சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறி, இந்த சம்பவம் குறித்து நேற்று போலீசில் புகார் அளித்ததாகப் பஹாங் காவல்துறைத் தலைவர் யாஹாயா ஓத்மான்(Yahaya Othman) கூறினார்.

மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போலிஸால் காவலில் வைக்கப்படுவார் என்று பீதியடைந்து பயந்து, பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்பை கணக்கிற்கு மாற்றவும், விசாரணை நோக்கங்களுக்காகத் தனது அனைத்து வங்கி தகவல்களையும் வழங்கவும் சந்தேக நபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினார்”.

“130,000 ரிங்கிட் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கவும், அதே கணக்கில் பணத்தை மாற்றவும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தப்பட்டார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணையின் நிலை குறித்து சந்தேக நபரை தொடர்பு கொள்ளத் தவறியதன் பின்னரே பாதிக்கப்பட்ட பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக யாஹாயா கூறினார்.

பொதுமக்கள் தங்கள் வங்கித் தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அல்லது காவல்துறையினரிடம் எப்போதும் சரிபார்க்கவும் என்று அவர் மக்களுக்கு நினைவூட்டினார்.