பினாங்கு கெடாவுக்கு சொந்தமா? சனுசிக்கு எதிராக போலிஸ் புகார்கள்

டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று பினாங்குவாசிகளை, கெடா முதலமைச்சர் முஹம்மது சானுசி முகமட் நோர் பினாங்கு இன்னும் கெடாவிற்கு சொந்தமானது என்று கூறியதற்காக, காவல்துறையில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தினார்.

ஒரு அறிக்கையில்,  கெடா மற்றும் பினாங்கு மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கும் வகையில், சானுசி பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதாக சாடினார்.

மேலும், “பொதுமக்கள் அதிருப்தியை உருவாக்கி, பினாங்கு இன்னும் கெடாவுக்குச் சொந்தமானது எனக் கூறி கெடா மற்றும் பினாங்கு மக்களிடையே பகையை ஏற்படுத்த முயற்சித்ததற்காக சனுசிக்கு எதிராக பினாங்குவாசிகள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்”.

“1.8 மில்லியன் பினாங்கு வாசிகள் ள் மட்டுமல்ல, பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம்கர்பால் சிங் இருவரும், மத்திய அரசமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்யும் அளவிற்கும் இழிவுபடுத்தும் அளவிற்கும், சட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதற்காக சானுசியை சாடியுள்ளனர்”.

திங்களன்று சானுசியின், பினாங்கு இன்னமும் கெடாவிற்குச் சொந்தமானது என்றும் எப்போதும் இருந்து வருகிறது, என்ற  கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் லிம்-இன் அறிக்கை வெளியிடப்பட்டது.

சனுசியின் கருத்துக்கள் பிரதமரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன, சனுசி அரசியலமைப்பையும் மலாயா கூட்டமைப்பை நிறுவுவதற்கான இறுதி ஒப்பந்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் கெடா சுல்தான் உட்பட அனைத்து மலாய் ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்ட அரசியலமைப்பு ஒப்பந்தத்தை அனைத்து தலைவர்களும் மதிக்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

லிம்மின் அறிக்கையில், பினாங்கின் இறையாண்மை மற்றும் ஒரு மாநிலமாக இருப்பதற்கான உரிமையை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் சனுசி நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து  விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என்று அந்த முன்னாள் நிதி அமைச்சர் கூறினார்.

கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி

“பினாங்கைப் பாதுகாக்கவும், ‘அரசியல் தலையீட்டு வழி  நம் மாநில ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும், நாம் நிம்மதியாக வாழ்க்கையைத் தொடரவும், செழிப்பை அனுபவிப்பதை உறுதி செய்யவும் சானுசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 1.8 மில்லியன் பினாங்குவாசிகளால் காவல்துறை புகார்களை பதிவு செய்யப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் பினாங்கு பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கெடா மந்திரி பெசாரில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளுமா என்றும் அவர் வினா விடுத்தார்.