செவ்வாய்க்கிழமை சரவாக் துணை அமைச்சர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 30 அன்று இரவு 9.06 மணிக்குத் தபுவான் ஜெயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே அடையாளம் தெரியாத நபரால் துணை அமைச்சர் தாக்கப்பட்டதாகச் சரவாக் போலீஸ் கமிஷனர் முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி(Mohd Azman Ahmad Sapri) கூறினார்.
அவரது புகாரில், அவர் நான்கு சந்தேக நபர்களை எதிர்கொண்டார், அவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படுகிறது என்றார்.
அவர்களில் ஒருவர், துணை அமைச்சரைத் தாக்க முயன்றார், அவரது முதுகில் கீறல் மற்றும் காயங்களை ஏற்படுத்தினார் என்று அஸ்மான் (மேலே) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு பினல் கொட் (Penal Code) 323/506 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது, என்றார்.
தகவல் அறிந்தவர்கள விசாரணை அதிகாரி ரத்னா போர்ஹானை 019-8176267 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
சினார் ஹரியான், அவர் காவல்துறை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பு தனது காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று கூரியது.
ஊனமுற்றோர் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காகக் காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
இதற்கிடையில், சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா காவல்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக அதன் சொந்த பணியாளர்களுக்கு அபராதம் விதித்ததை உறுதிப்படுத்தியது.
திங்கட்கிழமை Flora Damansara அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஊனமுற்றோர் நிறுத்துமிடத்தில் தனது ஹோண்டா ST 1300 மோட்டார் சைக்கிளை நிறுத்திய பணியாளர் ஒருவருக்கு எதிராகப் போக்குவரத்துப் பிரிவு அபராதம் விதித்தது.
இந்த மோட்டார் சைக்கிள் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க மோட்டார் படை பிரிவுக்குச் சொந்தமானது எனப் போலீசார் தெரிவித்தனர்.
Twitter பயனர் ஒருவர் சம்பவத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றியதை அடுத்து இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டது.
37,000 முறை பார்க்கப்பட்ட அந்த tweet நீக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாலைப் பயனாளர்களும் அனைத்து சாலை சின்னங்கலையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
இதுகுறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “விதிகளைப் பின்பற்றாத அமலாக்க முகவர் உட்பட எந்தவொரு சாலைப் பயனர்களுடனும் நாங்கள் சமரசம் செய்யமாட்டோம், மேலும் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்று கூரினார்.