லிம் கிட் சியாங்-க்கு டான் ஸ்ரீ பட்டம், நாளை பெறுகிறார்

டிஏபி மூத்த நாயகன் லிம் கிட் சியாங் நாளை ‘டான் ஸ்ரீ’ பட்டம் பெற்ற நபர்களின் வரிசையில் இணைவார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் 64வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பட்டமளிப்பு விழா நடைபெறும்.

82 வயதான இந்த டிஏபி தலைவர், டான்ஸ்ரீ பட்டம் பெரும்  முதல் டிஏபி தலைவர் ஆவார்.

பதவியில் இருக்கும் போது எந்தப் பட்டங்களையும் பெறக்கூடாது என்ற கட்சியின் பொதுக் கொள்கையில் ஒரு சிலரே டத்தோ பட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

டிஏபியின் மத்திய செயற்குழு (சிஇசி) உறுப்பினராகவும்  எம்.பி.யாகவும் இருந்து ஓய்வு பெற்ற லிம், கட்சியின் ஒப்புதலுடன் பட்டத்தை ஏற்க உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்க்கை

15வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து விலகிய பிறகும், லிம் தொடர்ந்து தனது பல நீண்ட அறிக்கைகள் மூலம் நடப்பு  அரசியல் முன்னேற்றங்களை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

அரசியலில், நாட்டின் மிக நீண்ட காலம் பதவி வகித்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

ஜனவரி 1974 முதல் ஜூன் 1975 வரை, நவம்பர் 1975 முதல் நவம்பர் 1999 வரை மற்றும் மார்ச் 2004 முதல் பிப்ரவரி 2008 வரை மூன்று தனித்தனி பதவி காலங்களில் மொத்தம் 29 ஆண்டுகள் பதவி வகித்தார்.

டிஏபி மூத்த வீரர் லிம் கிட் சியாங்

அந்த ஆண்டுகளில், லிம் ஐந்து மாநிலங்களில் எட்டு நாடாளுமன்ற இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், 1999 மற்றும் 2004 க்கு இடையில் பினாங்கில் உள்ள புக்கிட் பெண்டராவில், கெராக்கானின் அப்போதைய பொதுச்செயலாளர் சியா குவாங் சையை, எதிர்கொண்டார் தோல்வியுற்றார்.

டிஏபி-க்குள், லிம் 1999 இல் தேசியத் தலைவராக நியமிக்கப்படும் வரை பதவிகளில் உயர்ந்தார், அதன் பிறகு அவர் ஒரு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகினார்.

மத்திய செயல் குழு  அல்லது மாநில அளவிலான கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்த அவர், கடந்த ஆண்டு அரசியலில் இருந்து விலக முடிவு செய்தார்.