ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் நீச்சல் வீரர் பிராடன்

கம்போடியாவின் புனோம் பென்னில் இன்று நடைபெற்ற 12 வது ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளில் (Asean Para Games) மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தைத் தேசிய பாரா நீச்சல் வீரர் ஃப்ரைடன் தவான்(Fraidden Dawan) வென்றார்.

சரவாக்கின் பின்டுலுவைச் சேர்ந்த 36 வயதான தடகள வீரர் மோரோடோக் டெக்கோ அக்வாடிக்(Morodok Techo Aquatic) மையத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான S10 (leg impairment) 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் நம்பமுடியாத செயல்திறனை வெளிப்படுத்திச் சாம்பியன் ஆனார்.

இந்தோனேசியாவின் சோலோவில் நடந்த கடந்த APG பதிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் நான்கு நிமிடங்கள் 52.60 விநாடிகளில் கடந்து தனது சமீபத்திய தங்கத்தை வென்றதில் எந்தச் சிக்கலும் இல்லை.

இந்தோனேசிய போட்டியாளரான டாங்கிலிசான் ஸ்டீவன் சுவாலாங் 5:12.81 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வியட்நாம் நீச்சல் வீரர் வான் வின் குவாச் 5 நிமிடம் 23.30 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, மற்றொரு தேசிய நீச்சல் வீரர் ருஸ்மாடி எஸ் 8 (leg impairment) 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் 5:50.54 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.