மானியக் குறைப்பு T20 குழுவை மட்டுமே பாதிக்கிறது – பிரதமர்

அரசாங்க மானியங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை பணக்காரர்கள் அல்லது T20 குழுவை மட்டுமே பாதிக்கிறது, அதுவும் குறைந்த விகிதத்தில் உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“மானியக் குறைப்பு பணக்கார T20 குடும்பங்களை மட்டுமே உள்ளடக்கியது. குறைந்த மானியத்தில் அவர்களால் செய்ய முடியாதா?”

இன்று நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், “ஏழைகளுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக நான் அந்த வசதி படைத்தவர்களுக்களிடமிருந்து சிலவற்றை பெற வேண்டும்,” என்று கூறினார்.

ரிங்கிட் வீழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்க மானியங்களைக் குறைக்கும் முடிவுகுறித்து ராட்ஸி ஜிடின் (பெரிகாத்தான் நேசனல்-புத்ராஜெயா) எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

மின்சார மானியத்தை ஒரு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டிய பிரதமர், இந்தக் குறைப்பால் 90% மக்கள் பாதிக்கப்படவில்லை, ஏனெனில் இது அவர்களின் பெரிய வீடுகளைக் கொண்ட T20  வீடுகளில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

சிறு, குறுந்தொழில்கள் மற்றும் உணவுத் துறைக்கான மின் கட்டணத்தையும் அரசு உயர்த்தவில்லை.

“மின்சார மானியக் குறைப்பு வெகுஜனங்களை, T20 குழுவில் உள்ள செல்வந்தர்களை மட்டுமே இலக்காகக் கொண்டது. நாம் ஏன் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்க வேண்டும்? நாம் யாரை ஆதரிக்கிறோம்?

மேலும், ஹஜ் மானியத்தைப் பொறுத்தவரை, இந்த விலை உயர்வு மக்களைப் பாதிக்கவில்லை, ஏனெனில் இந்த அதிகரிப்பு T20 குழுவை மட்டுமே உள்ளடக்கியது.

மே 22 அன்று, நிதியமைச்சரான அன்வார், உயர் வருவாய் பிரிவினர் (T20) மின்சாரம் மற்றும் ஹஜ் மானியங்களால் இனி பயனடைய மாட்டார்கள் என்று கூறினார்.