1.5 டிரில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிய தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதால், பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கு ஐக்கிய அரசாங்கம் கடுமையாக உழைக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக இருக்கும் அன்வார் “முடிந்தவரையில் செலவழிக்க” புத்ராஜெயா கடன்களை வாங்குவது பொருளாதாரத்தை நலிவடையச் செய்யும்.
“எனவே, மலேசியாவின் கடன் உயருவதை நான் விரும்பவில்லை. நமது கடன் அளவைக் குறைக்க வேண்டும். பற்றாக்குறைகள் என்றால், நாம் நமது வரம்புகளுக்கு மேல் செலவு செய்கிறோம் என்று அர்த்தம்,” என்று அவர் இங்குள்ள பேராக் ஜூப்லி மக்களவையில் சிலாங்கூர் அரசு ஊழியர்களிடம் உரையாற்றிய போது கூறினார்.
பெரிய கடன்களை எடுப்பது மலேசியர்களின் எதிர்கால சந்ததியினருக்கு பாதகமாக அமையும் என்றும் அது ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் பிரதமர் கூறினார்.
“முன்னாள் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி “அரசாங்கத்திற்கு நிதி இல்லாவிட்டால் அதன் செலவினங்களுக்கு நிதியளிக்க கடன்களை எடுக்கலாம் என்று கூறியதை விமர்ச்சித்த பிரதமர் “இது பொறுப்பற்றது, கடனை யார் அடைப்பார்கள்? அது நம் குழந்தைகளாக இருக்கும்.
பொருளாதாரம் மீண்டவுடன் தனது பிரதமருக்கான சம்பளத்தைப் பெற முடிவு செய்துள்ளதாக கூறினார். கடந்த 6 மாதங்களாக உயர் பதவிக்கு தலைமை தாங்கியதற்காக தனது ஊதியத்தை எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
“பொருளாதாரம் மீண்டு வரும்போது, மீண்டும் சம்பளம் வாங்க முடியும். ஆனால், பொருளாதாரம் சீராகும் வரை, எனது சம்பளத்தை நான் எடுக்க மாட்டேன்”.
இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டு, ஜகார்த்தா கடுமையான செலவினக் குறைப்புகளைச் செய்திருப்பதையும் எடுத்துக்காட்டாக அவர் கூறினார்.
இருப்பினும், மலேசியர்களுக்கு சுமையாக இருக்கும் என்பதால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்ற மாட்டோம் என்று அன்வார் தெரிவித்துள்ளார்.
-fmt