வறுமையின் காரணமாக குழந்தைகள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்கு பள்ளியை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை, தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையாகும் என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறுகிறார்.
கேள்வி-பதில் அமர்வின் போது, “இது ஒரு சமூக பிரச்சனையாகும், அதை நாம் தீர்க்க வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று அவர் மக்களவையில் கூறினார்.
இஸ்மி மத் தாயிப் எனபவர் வறுமைக்கும் பள்ளி இடைநிற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றியும், அதை நிவர்த்தி செய்வதற்கான கல்வி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் பற்றி கேட்டிருந்தார்.
படிவம் ஐந்து முடியும் வரை அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் இருக்கக் கட்டாயமாக்குவதே ஒரு சாத்தியமான தீர்வாகும் என்று லிம் கூறினார்.
சில ஏழை மாணவர்கள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக உழைக்க வேண்டியிருந்ததால் பள்ளியை விட்டு வெளியேறினர், அத்தகைய மாணவர்களுக்கான தற்போதைய ஆதரவு வழிமுறைகளை விரிவாக்க அமைச்சகம் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
“விரிவான சிறப்பு மாதிரி பள்ளி ஆண்டு 9 (K9) பள்ளியின் முக்கிய குறிக்கோள், கிராமப்புறங்களில் இடைநிறுத்தம் பிரச்சினையை கையாள்வதாகும், குறிப்பாக தொலைவில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சவாலான நிலப்பரப்பு மற்றும் வறுமை,” என்று அவர் கூறினார்.
ஆண்டு ஒன்று முதல் படிவம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு மிகவும் விரிவான கல்விக்கான அணுகலை வழங்குவதற்காக விரிவான சிறப்பு மாதிரி பள்ளி ஆண்டு 11 (K11) ஆகவும் இந்த கருத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“K11 கருத்து கீழ்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டாட்சி உதவித்தொகை, துணை உணவுத் திட்டங்கள் மற்றும் ஆரம்ப பள்ளிக் கல்வி உதவி உட்பட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 வகையான உதவிகளையும் அமைச்சகம் வழங்குகி வருகிறது.
“மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க பாடநூல் கடன்கள் மற்றும் ஆலோசனை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
-fmt