அண்மையில் இந்தோனேசியாவுடன் கையெழுத்திடப்பட்ட கடல் எல்லை ஒப்பந்தங்களில் நாட்டின் இறையாண்மையில் அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளவில்லை என பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
நேற்று முந்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அன்வார் (மேலே) ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துகளை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
“சமரசம் குறித்த விஷயங்கள் எழவில்லை. (இந்தோனேசிய ஜனாதிபதி) ஜோகோ விடோடோ அவரது மக்களையும், இந்தோனேசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், நான் எங்கள் மக்களையும் மலேசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.
பிரதமரின் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், “நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் தியாகம் செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடு” என்று கூறினார்.
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டின் இறையாண்மையை சமரசம் செய்யாது என்று அரசாங்கம் உறுதியளிக்க முடியுமா என்று கேட்ட முகிடின் யாசின் (PN-Pagoh) க்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதைக் கூறினார்