ஒராங் அஸ்லி நில உரிமைகள்: ராம்லி அரசியலமைப்பு திருத்தங்களை முன்வைத்தார்

பழங்குடி மக்கள் சட்டம் 1954 இன் கீழ் “சட்ட வெற்றிடங்கள்” (legal vacuums) உள்ளன, அவை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ராம்லி முகமட் நோர் இன்று கூறினார்.

குறிப்பாக, இந்த விவகாரம் கூட்டாட்சி அரசியலமைப்பின் அட்டவணை 9 இன் கீழ் உள்ள விதிகளுடன் தொடர்புடையது என்று எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை சபாநாயகராக நியமிக்கப்பட்ட முதல் ஒராங் அஸ்லி ரம்லி கூறினார்.

“மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி அரசாங்கம் ஒராங் அஸ்லிக்கு நிலத்தை அரசிதழில் வெளியிட்டிருந்தாலும், எந்த நேரத்திலும் மாநில அரசு நிலத்தைத் திரும்பப் பெறலாம்,” என்று சுஹாகாம் ஆண்டு அறிக்கை 2020 மீதான விவாதங்களுக்குக் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு துணை அமைச்சர் ருபியா வாங்கின் பதிலுக்குத் தலைமை தாங்கியபோது அவர் கூறினார்.

“எங்களிடம் உள்ள தற்போதைய அரசியல் நிலைத்தன்மையுடன், கூட்டாட்சி அரசியலமைப்பைத் திருத்துவது குறித்து விவாதிக்க (கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி) அமைச்சரும் சட்ட அமைச்சரும் பரிந்துரைக்க விரும்புகிறேன்”.

“இது ஒராங் அஸ்லியின் நலனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஒரு பொதுப்பட்டியலுக்கு (கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ்) கொண்டுவருவதாகும், இது மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தின் கடமையாகும்,” என்று ராம்லி (மேலே) கூறினார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு

தற்போது, கூட்டாட்சி அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை ஓராங் அஸ்லியின் நலனைக் கூட்டாட்சி விஷயங்களின் ஒரு பகுதியாகப் பட்டியலிட்டுள்ளது, அதே நேரத்தில் நிலம் மாநிலத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்று ராம்லி கூறினார்.

எனவே, ஒராங் அஸ்லியின் நலனைப் பகிரப்பட்ட கூட்டாட்சி-மாநில அதிகாரங்களுடன் பொதுப்பட்டியலில் சேர்க்க அரசியலமைப்பில் திருத்தம் செய்வது அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பழங்குடி மக்கள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான இறுதி வரைவு மசோதாவைப் பார்க்க ராம்லி அனுமதி கோரினார்.

நானும் எனது மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

அதற்குப் பதிலளித்த ரூபியா, ராம்லியின் கோரிக்கையையும், கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் இருக்கும் கட்டுப்பாடுகளையும் கவனித்ததாகக் கூறினார்.