அமைதியாக இருந்ததற்காகச் சுஹாகாம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளானது

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது போராட்டத்தில் விடாமுயற்சியுடனும் தீவிரமாகவும் ஈடுபடுவதாகக் கூறிய போதிலும் சுஹாகாம் “அமைதியாக” இருப்பதாக மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மனித உரிமைகள் அமைப்பான சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி, கண்காணிப்பு அமைப்பு ஏன் அமைதியாகச் செயல்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார், பொதுமக்களுடனான அதன் ஈடுபாட்டில் அது இன்னும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நீங்கள் மனித உரிமைகளுக்கான காவலாளி. நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், சிவில் சமூகத்துடன் ஈடுபட வேண்டும்”.

“மனித உரிமைகள் பிரச்சினைகள்குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்த அரசாங்கத்திற்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்… இது சுஹாகாமின் பொறுப்பு,” என்று சிவன் இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுவாராம் தலைமையகத்தில் கூறினார்.