குளிர்பானத்திலுள்ள மெத்தனால் விஷத்தால் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்

சபாவின் பிடாஸில், மெத்தனால் விஷம் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 17 வயதுடைய இரண்டு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

படிவம் 5 மாணவர்களில் ஒருவர் புதன்கிழமை இறந்துள்ளதாகவும், மற்றவர் கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல் மாணவர் மெத்தனால் விஷத்தால் பல உறுப்புகள் செயலிழந்து இறந்தார், இரண்டாவது மாணவர் கடுமையான மூளை பாதிப்பால் இறந்தார் என்று கோட்டா மருது காவல்துறைத் தலைவர் ஜைரோல்நிசல் இஷாக் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளை திடீர் மரணம் என காவல்துறையினர்  வகைப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 9 ஆம் தேதி, பிடாஸில் உள்ள உறைவிடப் பள்ளியில் 20 மாணவர்கள் கார்பனேட்டட் பானத்தையும் தொழில்துறை ஸ்பிரிட் கலவையையும் உட்கொண்ட பிறகு மெத்தனால் விஷத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 13 முதல் 17 வயதுடையவர்கள் என்று சபா துணை சுகாதார இயக்குநர் டாக்டர் அசிட்ஸ் சன்னா தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் வயிற்று வலி, வாந்தி, மங்கலான பார்வை மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டனர், இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

-fmt