வருமான வரி இலாக்காவின் முற்றுகையா? சட்ட நடவடிக்கை எடுக்க ஹம்சா திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், வருமான வரி இலாக்காவால்  தனது வீடு ‘ரெய்டு’ செய்யப்பட்டதாக புகார் அளித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பெரிக்காத்தான் கட்சியின் தேசிய செயலாளர், இந்த வார தொடக்கத்தில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அந்த இலாக்கா வந்தபோது, ரெய்டின் வரையறை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

“ரெய்டு என்றால் என்ன… ரெய்டு என்ற வார்த்தையை யார் பயன்படுத்தினார்கள்? என் மீது நிறைய அவதூறுகள் போடப்பட்டுள்ளன”.

“நாடு முழுவதும் பரப்பப்படும் இதுபோன்ற அவதூறான செய்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று நேற்றிரவு திரெங்கானுவில் உள்ள மாராங்கில் PN இன் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் அந்தமுன்னாள் உள்துறை அமைச்சர் கூறினார்.

ஹம்சா மேலும் கூறியது என்னவென்றால், நேரம் வரும்போது அவர் இந்த விஷயத்தில் சட்டப்படி செசட்யல்படுவாராம்.

“அனைத்து செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை (‘ரெய்டு’) தொகுக்குமாறு எனது அதிகாரியிடம் கூறியுள்ளேன், நேரம் வரும்போது, அவற்றைப் பயன்படுத்துவேன்.”

தனக்கும் பிஎன் தலைமைக்கும் எதிரான தாக்குதல்கள், வரவிருக்கும் 6 மாநில தேர்தல்களுக்கு முன்னதாக அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் அவதூறு என்று ஹம்சா கூறினார்.

மேலும் மாநிலத் தேர்தலில் தனது மீதான கலங்கத்தை நீக்கிவிடுவேன் என்று உறுதியளித்தார்.

கோலாலம்பூரில் உள்ள டமன்சாராவில் உள்ள ஹம்சாவின் வீட்டிற்கு IRB அதிகாரிகள் சென்று கணக்குகள் மற்றும் சொத்துரிமை தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நடவடிக்கையின் போது அந்த லாரூட் எம்.பி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

பெர்சாத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் சைபுதீன் அப்துல்லா, இந்த சம்பவத்தை மாநில தேர்தல்களுக்கு முன்னதாக அரசாங்கம் மேற்கொண்ட “மலிவான அரசியல் ஸ்டண்ட்” என்று கூறினார்.