பிரதமர் அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளைப் பகைமையின் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம், மாறாக விஷயங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளுடன் பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களுக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து சில தரப்பினர் சமூக ஊடகங்களில் பல தவறான உண்மைகளையும் அவதூறுகளையும் தொடர்ந்து இது நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
எனவே, துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், தவறான விஷயங்களைத் தடுப்பதிலும் அமைச்சகங்களும் முகமைகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தனக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோவிக்கும் (Joko Widodo) இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட எல்லை நிர்ணய ஒப்பந்தம் எழுப்பப்பட்டதாகவும், அவரது கூற்றுப்படி, அந்த விவகாரம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பொய்கள் மற்றும் அவதூறுகளுடன் பரபரப்பாகப் பரப்பப்பட்டது. ஆனால் இந்த அரசியல் வேறுபாட்டை நாம் பகை ஆயுதமாக, அவதூறு ஆயுதமாக மாற்ற முடியாது.
துணைப் பிரதமரும் கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சருமான அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, மென்டேரி பெசார் அமினுதீன் ஹருன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையில், சராசரி மின்சாரக் கட்டண உயர்வு 1,500 கிலோவாட் (kW) க்கும் அதிகமான நுகர்வு கொண்டவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பிரதமர் மீண்டும் விளக்கினார்.
“மின்சார மானியத்தைக் குறைப்பது தொடர்பாக, மக்கள்மீது சுமையேற்றுகிறோம் என்று எதிர்க்கட்சிகள் கூறினர், இந்தக் குறைப்பு 1,500 கிலோவாட் பயனாளர்களாகக் குறைக்கப்பட்டது… ஆனால் இது மக்களுக்குச் சுமை என்று பிரச்சாரம் (எதிர்க்கட்சி) கூறியது”.
“சாதாரண மக்கள், அரசு ஊழியர்கள், அதிக மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய பிரிவில் சேர்க்கப்படவில்லை. ஜூன் 26 அன்று சும்பங்கன் துனை ரஹ்மா (Sumbangan Tunai Rahmah) மற்றும் eBelia Rahmah போன்ற உதவிகள்மூலம் பணம் மக்களுக்குத் திரும்பும் வகையில் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்,” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அது ஏற்படுத்தப்போகும் பாதிப்பைப் புரிந்துகொண்டதால், அரசின் கடனை அதிகரிக்க வேண்டாம் என அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அன்வார் கூறினார்.
“1 டிரில்லியனுக்கும் அதிகமான கடன் இன்னும் ஓரிரு வருடங்களில் தீர்க்கப்படும், இது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் முயற்சிப்போம், அரசாங்கம் 5.6% பற்றாக்குறையை சமாளிக்கிறது,” என்றும் கூறினார்.