பூமிபுத்திரர் அல்லாதவர்களைச் சீருடை அணிந்த படைகளில் சேர ஆர்வத்தை ஈர்க்கும் முயற்சியாக இராணுவம் பள்ளிகளில் தகவல் பிரச்சாரத்தை நடத்தியது.
மலேசிய ஆயுதப் படையின் ஆயுதப் பிரிவுகளில் ஒன்றில் தொழில் வாய்ப்புகளைப் பற்றிப் பூமிபுத்திரர் அல்லாதவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் அறிவூட்டுவதே இந்தப் பிரச்சாரம் என்று இராணுவத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ முகமது அப் ரஹ்மான் கூறினார்.
“இராணுவத்தில் சேர்ந்த தனிநபர்கள் படையில் தங்கள் தொழிலை முன்னேற்றுவதற்கு உயர் கல்வியை தொடரலாம் என்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இன்றைய விழாகுறித்து முகமது கூறுகையில், முகாமில் உள்ள ராணுவ வீரர்களுக்கு 32 பசுக்கள் பலியிடப்பட்டு இறைச்சி வழங்கப்பட்டது.
நகரம் முழுவதும் உள்ள அஸ்னாஃப் குழுவுக்குப் பலி இறைச்சியை விநியோகிக்க இராணுவம் ஒன்பது அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கிறது என்று முகமது மேலும் கூறினார்.