அரசாங்கம் எப்போதும் இஸ்லாத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தும் மற்றும் அனைத்து மலேசியர்களின் உரிமைகளும் நீதியும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில்‘Adab Perbezaan Pendapat Dalam Islam’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அன்வார், மக்கள் அளித்த ஆணையையும் நம்பிக்கையையும் அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகக் கூறினார்.
“ஒரு முஸ்லிமாக, இஸ்லாத்தின் கொள்கைகளையும், முஸ்லிமல்லாதவர்கள் உட்பட அனைவருக்கும் நீதியையும் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் ஆணையும் எனக்கு உள்ளது”.
“மலேசியா மதானி என்ற கருத்தாக்கம் இந்தக் கொள்கைகளிலிருந்து வெகுதொலைவில் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசியா மதானி என்ற கருத்தாக்கத்தில் பொதிந்துள்ள கொள்கைகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.